For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தை மாற்றிய அந்த விஷயம்.. மீண்டும் அடிபடும் ‘சாப்ட் சிக்னல்’ பேச்சு.. ஷிகர் தவான் தான் காரணம்!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் விக்கெட்டில் நடுவர்களின் முடிவு மீண்டு சாப்ட் சிக்னல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Rohit Sharma-வின் Plan-ஐ சுக்குநூறாக உடைத்த Rishabh Pant | Oneindia Tamil

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெற்றோருக்கு கொரோனா...தோனி முன் இருக்கும் முக்கிய கேள்வி.. சிஎஸ்கே ரசிகர்கள் வெய்ட்டிங்! பெற்றோருக்கு கொரோனா...தோனி முன் இருக்கும் முக்கிய கேள்வி.. சிஎஸ்கே ரசிகர்கள் வெய்ட்டிங்!

இந்த போட்டியில் முதல் போட்டியிலேயே அவுட்டாகவிருந்த ஷிகர் தவான், நடுவர் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவால், டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக விளங்கினார்.

அசத்திய தவான்

அசத்திய தவான்

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் 44 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சர்ச்சை முடிவு

சர்ச்சை முடிவு

ஆனால் அவர் முதல் ஓவரிலேயே அவுட்டாகி இருக்க வேண்டியவர். முதல் ஓவரில் ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்து தவானின் பேட்டில் எட்ஜாகி சென்றது. இதனை கவர் திசையில் நின்றிருந்த ஹர்த்திக் பாண்டியா டைவ் அடித்து தரையை ஒட்டிப் பிடித்தார். இது மிகவும் க்ளோஸ் காலாக இருந்ததால் 3வது நடுவருக்கு கள நடுவர் பரிந்துரைத்தார். ஐபிஎல்-ல் சாப்ட் சிக்னல் முறை இல்லாததால் கள நடுவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனை ரிவைன்ட் செய்து பார்த்த 3வது நடுவர்,ஒரு திசையில் பந்து பாண்டியாவின் கையில் இருப்பதாகவும் மற்றொரு திசையில் பந்து முதலில் தரையில் பட்டுள்ளதாலும் நாட் அவுட் கொடுத்தார். அவரின் இந்த முடிவு ஆட்டத்தையே மாற்றி அமைத்தது.

ஆகாஷ் சோப்ரா

ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹர்த்திக் பாண்டியா பிடித்த கேட்ச் மிகவும் க்ளோஸ் காலாக இருந்துள்ளது. ஒரு வேளை இந்த ஐபிஎல்-ல் சாப்ட் சிக்னல் முறை இருந்திருந்தால் நிச்சயம் ஷிகர் தவான் அவுட் கொடுக்கப்பட்டிருப்பார். போட்டி வேறு திசையில் மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து எழுந்துவந்த சாப்ட் சிக்னல் குற்றச்சாட்டு காரணமாக ஐபிஎல் தொடரில் சாப்ட் சிக்னல் முறை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிக கடினம்

மிக கடினம்

இதே போல இதுகுறித்து பேசிய பிரெட் லி, ஹர்த்திக்கின் கேட்ச்சில் நாம் வெவ்வேறு திசையில் இருந்த கேமிராவில் பார்த்தால் ஒவ்வொரு விடை கிடைக்கும். இது மிகவும் கடினமான முடிவு. ஒரு புறம் பாண்டியா கையில் பந்து இருப்பது போன்றும், ஒரு புறம் பந்து தரையில் இருப்பது போன்றும் தெரியும். இதில் முடிவெடுப்பது மிகவும் கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 21, 2021, 16:51 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
Experts Have their Points on Hardik Pandya Catch Attempt in MI vs DC Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X