For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாம் "கட்".. உங்களை நம்பித்தானே இறக்கினேன்.. கோலியை ஏமாற்றிய தமிழக வீரர்.. இனி வாய்ப்பில்லை ராஜா!

சென்னை: மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டரில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி வெற்றிபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வென்றது.

பெங்களூர்

பெங்களூர்

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக பெங்களூர் அணியில் பவர் பிளேவிற்கு பின் வாஷிங்க்டன் சுந்தர்தான் பவுலிங் செய்வார். 8 - 15 ஓவர்கள் வரை மாற்றி மாற்றி வாஷிங்க்டன் சுந்தர்தான் பவுலிங் வீசுவார். இவர்தான் ரன்னை கட்டுப்படுத்துவார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த வருடம் கோலி இதில் பெரிய மாற்றம் செய்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் மிடிலில் சுந்தர் ஒரே ஒரு ஓவர்தான் போட்டார். நேற்று சுந்தர் ஒரு ஓவர் போட்டு, ஒரு விக்கெட் எடுத்தாலும், கோலி அவரை பயன்படுத்தவில்லை. மீண்டும் ஓவர் போட சுந்தருக்கு கோலி வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனால் நேற்று வாஷிங்க்டன் சுந்தருக்கு ஓப்பனிங் பேட்டிங் இறங்க கோலி வாய்ப்பு கொடுத்தார். படிக்கல் இல்லாத காரணத்தால் ஓப்பனிங் வீரராக சுந்தரை கோலி களமிறக்கினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இவர் பேட்டிங் நன்றாக இருந்ததால் மிடில் ஆர்டரில் இறங்கி வந்தவரை நேற்று கோலி ஓப்பனிங் இறக்கினார்.

ஆடவில்லை

ஆடவில்லை

ஆனால் ஓப்பனிங் இறங்கிய சுந்தர் நேற்று பெரிதாக ஆடவில்லை. சரியாக பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். ரிதம் கிடைக்காமல் திணறினார். 16 பந்துகள் பிடித்த சுந்தர் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங் பவர்பிளேவில் இவர் இப்படி ஆடியது பெரிய அளவில் சர்ச்சையானது. கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் அடுத்த போட்டியில் சுந்தர் ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். படிக்கல் மீண்டும் திரும்பி வருவதால், சுந்தர் மீண்டும் ஓப்பனிங் இறங்க மாட்டார் என்கிறார்கள். இவரின் பேட்டிங்கை நம்பி கோலி நேற்று களமிறக்கினார், ஆனால் கோலி வைத்த நம்பிக்கையை சுந்தர் நேற்று காப்பாற்றவில்லை.

புரொமோஷன்

புரொமோஷன்

இதனால் மீண்டும் சுந்தர் 5 அல்லது 6வது இடத்தில் வரும் போட்டிகளில் இறங்குவார் என்கிறார்கள். அதோடு இனி வரும் போட்டிகளில் சுந்தர் ஒரு ஓவருக்கு பதிலாக கூடுதல் ஓவர்களை பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Saturday, April 10, 2021, 17:35 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
IPL 2021: Washington Sundar may not open anymore for RCB as Padikkal will return.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X