For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது என்ன நீல கலரில்?.. ரசிகர்களை குழப்பிய பால்.. நேற்று மேட்சில் நடந்த அந்த சம்பவம்.. இதான் பின்னணி!

மும்பை: நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பந்தில் காணப்பட்ட நீல நிற முத்திரை ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றிபெறுவதற்காக ராஜஸ்தான் அணி கடைசி நொடி வரை போராடியது. கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடியாமல் சஞ்சு சாம்சன் அவுட் ஆன நிலையில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி வரை விறுவிறுப்பாக போன இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பவுலிங் ராஜஸ்தான் அணியின் பவுலிங்கை விட கொஞ்சம் சிறப்பாக இருந்தது.

விக்கெட்

விக்கெட்

ஆனால் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்கள் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. நேற்று பஞ்சாப் அணிக்காக ஆடிய ஜெய் ரிச்சர்தான், ரைலி மெரிடித் இருவரும் பெரிய அளவில் சரியாக ஓவர் வீசவில்லை. தொடர்ந்து ஜெய் ரிச்சர்ட்ஸன் ரன்களை வாரி வழங்கிய நிலையில் திடீரென அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த ஜோஸ் பட்லரை விக்கெட் எடுத்தார்.

ஸ்லோ பால்

ஸ்லோ பால்

சிறப்பான ஸ்லோ பால் யார்க்கர் மூலம் பட்லரை ரிச்சர்ட்சன் விக்கெட் எடுத்தார். இந்த விக்கெட் ரிப்ளேயின் போதுதான் கிரிக்கெட் பந்தில் நீல நிறத்தில் எதோ முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை பந்து என்பதால், இந்த நீல முத்திரை அப்பட்டமாக தெரிந்தது.

நீலம்

நீலம்

பந்தில் என்ன நீல கலரில், எப்படி நீல முத்திரை பந்தில் வந்தது, ஒன்னும் புரியலையே என்று இதை பார்த்த ரசிகர்கள் பலர் குழப்பமாக கேட்டனர். பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சந்தேகமாக கேட்டனர். இந்த நிலையில் இது பந்தில் இருக்கும் ஸ்பான்சர் முத்திரை என்று கூறப்படுகிறது.

சந்தேகம்

சந்தேகம்

பொதுவாக பவுலிங்கின் போது பந்தில் ஒரு பக்கத்தை தேய்த்துக்கொள்ள அனுமதிக்கப்படும், இன்னொரு பக்கத்தை புதிதாக வைத்திருக்க வேண்டும். இதில் நீல முத்திரை இருக்கும் பகுதி தேய்க்கப்படாத ஸ்டிக்கர் இருக்கும் பகுதியாகும். இன்னொரு பக்கம் தேய்க்கப்பட்டதால்.. இந்த நீல நிறம் தனியாக தெரிகிறது.

மோசம்

மோசம்

பந்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே இப்படி ஒரு பக்கம் நல்ல பளபளப்பாக தனியாக தெரியும். நேற்று ராஜஸ்தான் வீரர்கள் பந்தை நன்றாக பயன்படுத்தி உள்ளனர். அதனால்தான் ஒரு பக்கம் இருந்த முத்திரை கூட அழியாமல் அப்படியே தெரிந்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..

வைட் லைன்

வைட் லைன்

அதே சமயம் இந்த நீல நிறம் வைட் லைனில் போடப்பட்டு இருந்த பெயின்ட் காரணமாக வந்தது இருக்கலாம். பொதுவாக வைட் லைனில் வெள்ளை நிற பெயிண்ட் இருக்கும். ஆனால் நேற்று நீல நிற பெயிண்ட் இருந்தது. இது ஒருவேளை பந்தில் ஒட்டி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, April 13, 2021, 18:09 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
IPL 2021: What was the blue thing seen in the ball in yesterday Punjab vs RR match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X