மொயினுக்கு காயமா? அப்ப அடுத்த மேட்சில் சிஎஸ்கேவில் ஆட போவது யார்? தோனி குறி வைக்கும் 2 ஜாம்பவான்கள்

சென்னை: சிஎஸ்கே அணியில் மொயின் அலி காயம் அடைந்தால் அவருக்கு மாற்றாக களமிறக்க இரண்டு வீரர்களை தோனி அணுகி உள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.

IPL 2021: காலில் ஏற்பட்ட காயம்.. பாதி போட்டியில் வெளியேறிய Moeen Ali

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் மிக முக்கியமான அணியாக தற்போது சிஎஸ்கே உருவெடுத்துள்ளது.

முக்கியமாக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக 220 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, கொல்கத்தாவை 202 ரன்னுக்கு ஆல் அவுட் செய்து வெற்றிபெற்றது.

மொயின்

மொயின்

நேற்று போட்டியில் சிஎஸ்கே அணியின் மொயின் அலி சிறப்பாக பேட்டிங் செய்தார். 12 பந்துகள் பிடித்த மொயின் அலி 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2 சிக்ஸர், 2 பவுண்டரி எடுத்து மொயின் சிறந்த "கேமியோ" கொடுத்தார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆனால் இவர் நேற்று பவுலிங் செய்யவில்லை. பீல்டிங் செய்யும் போது பவுண்டரியை தடுக்கும் போது இவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் பீல்டிங் செய்யாமல் மொயின் அலி பெவிலியன் சென்றார்.

ஏன்

ஏன்

இவரின் காயம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத நிலையில், மொயின் காயம் அடைந்தால் அவருக்கு பதில் இரண்டு வீரர்களை தோனி குறி வைத்துள்ளார் என்று தகவல்கள் வருகின்றன. மொயினுக்கு பதிலாக மிட்சல் சாண்ட்னர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஸ்பின்

ஸ்பின்

மிட்சல் ஸ்பின் மற்றும் பேட்டிங் செய்ய கூடியவர். அப்படி இல்லை என்றால் கிருஷ்ணப்பா கவுதமிற்கு தோனி வாய்ப்பு கொடுப்பார் என்கிறார்கள். இவரின் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால் தோனி இவருக்கும் குறி வைத்துள்ளார் என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Who will play in the place of Moeen Ali incase of his injury worsen?
Story first published: Thursday, April 22, 2021, 13:06 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X