For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசைக்க முடியாத ரெக்கார்ட்.. சிஎஸ்கே vs கேகேஆர் போட்டியில் உள்ள சுவாரஸ்யம்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு

அமீரகம்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதுவரை சிஎஸ்கே 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பை வென்றுள்ளதால், இந்த முறை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பண்ட் செய்த சிறிய தவறு.. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய அந்த முடிவு.. டெல்லி அணி தோல்விக்கான காரணம் பண்ட் செய்த சிறிய தவறு.. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய அந்த முடிவு.. டெல்லி அணி தோல்விக்கான காரணம்

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறிய சிஎஸ்கே இந்த முறை சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது. ஓப்பனிங் முதல் பவுலிங் வரை அனைத்து வீரர்களுமே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பினர். இதே போல இந்தாண்டு ஐபிஎல்-ல் முதல் பகுதியில் சொதப்பிய கொல்கத்தா அணி, 2வது பகுதியில் அசுர பலத்தில் உள்ளது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களான தோனி - மோர்கன் மோதுவதால் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேகேஆர் அணியின் வரலாறு

கேகேஆர் அணியின் வரலாறு

இந்நிலையில் இரண்டு அணிகளில் எது வென்றாலும், சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி இதுவரை இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த 2 முறையுமே கோப்பையை வென்றுள்ளது. எனவே 3வது முறையாக கோப்பையை வென்றுவிட்டால், ஐபிஎல்-ல் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லாமல் வந்ததில்லை என்ற பெருமையை கொல்கத்தா அணி பெறும்.

சிஎஸ்கே புள்ளிவிவரம்

சிஎஸ்கே புள்ளிவிவரம்

இதே போல ஐபிஎல்-ல் கடந்த கால புள்ளிவிவரங்கள் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக உள்ளது. அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த அணி தான் கோப்பையை வென்றுள்ளது. அந்தவகையில் இந்த முறை சிஎஸ்கே 2வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 4வது இடத்தை தான் பிடித்திருந்தது. எனவே சென்னை அணிக்கும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

எந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு பிட்ச்-ன் தன்மையும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. துபாய் மைதானம் மிகப்பெரிய பவுண்டரி எல்லைகளை கொண்டுள்ளது. எனவே அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக இங்கு இருக்காது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து, பின்னர் குறைவான இலக்கை நோக்கி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 15, 2021, 18:34 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
Who will win the Final match, interesting factors on CSK vs KKR match in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X