For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு விரக்தி இருந்திருக்கும்.. தோனி ஏன் அப்படி சொன்னார்?.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்!

சென்னை: நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக தனது பேட்டிங் சரியில்லை என்பதை தோனியே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

Recommended Video

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று சிஎஸ்கே வெற்றிபெற்று இருந்தாலும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. நேற்று 17 பந்துகள் பிடித்த தோனி 2 பவுண்டரி அடித்து 18 ரன்கள் எடுத்தார்.

நேற்று இவரால் பெரிய அளவில் அதிரடியாக ஆட முடியவில்லை. இதை தோனியே வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

நான் பிடித்த முதல் 6 பந்துகளால் சிஎஸ்கே அணி தோல்வி கூட அடைந்திருக்கும். மேட்சே எங்களின் கையைவிட்டு போய் இருக்கும் என்று தன்னுடைய ஆட்டத்தை தோனியே விமர்சனம் செய்து இருந்தார். தன்னுடைய ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதை தோனி இப்படி விமர்சனம் செய்துள்ளார் என்கிறார்கள்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

நேற்று சிஎஸ்கேவில் மற்ற வீரர்கள் பலரும் அதிரடியாக ஆடினார்கள். ஆனால் தோனி மட்டும் 100 ஸ்டிரைக் ரேட் வைத்து ஆடினார். இதுதான் தோனி தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள முக்கிய காரணம். தோனி இப்படி கூறியதற்கு பின் அவரின் சமீபத்திய பார்ம் இன்னொரு முக்கிய காரணமாகும்.

பார்ம்

பார்ம்

கடந்த 2 வருடமாக தோனி பார்மில் இல்லை. அதேபோல் இன்னொரு பக்கம் அவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் 40+ ரன்களை தோனி அடித்தார். மற்ற போட்டிகளில் எல்லாம் அதிரடியாக ஆட முடியாமல் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.

சீசன்

சீசன்

இந்த சீசனில் அப்படி நடக்க கூடாது என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார். முக்கியமாக முதலில் டொக் வைத்துவிட்டு பின் அதிரடி காட்ட அவர் விரும்பவில்லை. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்ற சிஎஸ்கே வீரர்களும் இப்படித்தான் ஆட வேண்டும் என்று தோனி கருதுகிறார்.

அவசரம்

அவசரம்

இதனால்தான் அவர் நேற்று கொஞ்சம் அவசரமாக ஆட முயன்றார். ஆனால் தோனியால் சரியாக ஷாட் அடிக்க முடியவில்லை. இந்த விரக்தியில்தான் தான் ஆடிய முதல் 6 பந்துகள் குறித்து தோனியே விமர்சனம் செய்துள்ளார்.

அதிரடி

அதிரடி

தோனி கண்டிப்பாக அதிரடி பாதைக்கு திரும்ப நினைக்கிறார். முதலில் பாலில் இருந்தே இன்டன்ட் காட்ட நினைக்கிறார். அதனால்தான் தன்னுடைய ஆட்டத்தை முதல்முறையாக வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Tuesday, April 20, 2021, 14:29 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
IPL 2021: Why CSK skipper Dhoni talked about his own batting strike rate?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X