For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூத்து செய்த 3 தவறு.. 2 சிக்கல்.. மொத்தமாக தூக்கி அடிக்க போகும் தோனி.. நேற்று நடந்த பரபரப்பு சம்பவம்

சென்னை: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை வெற்றிபெற்றது. தொடக்கத்தில் இருந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே நேற்று எளிதாக வெற்றிபெற்றது.

Recommended Video

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

நேற்று சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் மும்பையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பஞ்சாப்பிற்கு எதிரான இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 20 ஓவருக்கு 106/8 ரன்கள் ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே வெறும் 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் சிஎஸ்கே எல்லா துறைகளிலும் நன்றாக ஆடியது. நன்றாக பேட்டிங் செய்தது, நன்றாக பவுலிங் செய்தது., முக்கியமாக மிக சிறப்பாக பீல்டிங் செய்தது. ஆனால் சிஎஸ்கேவில் ஒரே ஒரு வீரர் மட்டும் நேற்று கொஞ்சம் கூட ஆர்வமே இன்றி ஆடினார்.

ஆர்வமே இல்லை

ஆர்வமே இல்லை

சென்னை அணியில் ஆடும் இளம் வீரர் ரூத்துராஜ்தான் நேற்று மிகவும் மோசமாக பர்பார்ம் செய்தது. இவர் நேற்று பீல்டிங் சரியாக செய்யவில்லை. தொடக்கத்திலேயே கெயில் விக்கெட்டை தவற விட்டார். அதன்பின் பீல்டிங் பல இடங்களில் சரியாக நிற்காமல் திணறினார்.

வேறு

வேறு

அதன்பின் பேட்டிங்கிலும் இவர் சரியாக இல்லை. நேற்று இவர் சரியாக ஆட முடியாமல் கஷ்டப்பட்டது இரண்டாவது தவறு. பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினார். பந்தை எந்த வேகத்தில், எப்படி செல்கிறது என்பதை கூட கணிக்க முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டார்.

கஷ்டப்பட்டார்

கஷ்டப்பட்டார்

இவர் செய்த மூன்றாவது தவறு, முக்கியமான் போட்டியில் அதிக பந்துகளை பவர் பிளேவில் பிடித்துவிட்டு அவுட் ஆனது. 16 பந்துகள் பிடித்த இவர் வெறும் 5 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பேட்டிங்கிற்கு பிட்ச் சாதகமாக இருந்தும் ரூத்துராஜ் இந்த தவறை செய்தார்.

சிக்கல்

சிக்கல்

சிஎஸ்கே அணிக்கு இதனால் இரண்டு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம் சிஎஸ்கேவிற்கு மீண்டும் ஓப்பனிங் பிரச்சனையாகி உள்ளது. பவர் பிளேவில் அதிரடியாக ஆட கூடிய வீரர் இல்லை. இரண்டாவது சிக்கல் ரூத்துராஜை நீக்கினால் அவருக்கு பதில் யாரை கொண்டு வருவது, அணிக்குள் யாரை இறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனி

தோனி

கண்டிப்பாக தோனி விரைவில் ரூத்துராஜ் மீது நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள். இன்னொரு போட்டி ரூத்துராஜுக்கு தோனி கொடுப்பார். அதிலும் சொதப்பினால் அணியில் இருந்து நீக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, April 17, 2021, 8:54 [IST]
Other articles published on Apr 17, 2021
English summary
IPL 2021: Why Ruturaj should act fast to keep his place safe in CSK?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X