For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் சிங்கிள் தராத சஞ்சு சாம்சன்.. மனமுடைந்த மோரிஸ்.. கொதிக்கும் பேன்ஸ்.. யார் செய்தது தவறு?

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் சிங்கிள் தர மறுத்தது சர்ச்சையாகி உள்ளது.

Recommended Video

PBKS vs RR:Strike கொடுக்காத Sanju Samson! மனமுடைந்த Chris Morris! | OneIndia Tamil

நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நேற்று சஞ்சு சாம்சன் கடைசி வரை போராடி 119 ரன்கள் எடுத்தும் கூடராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் கடைசி 19 ஓவர் வரை யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்கவே முடியவில்லை. ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வந்தார். ஆனால் இன்னொரு பக்கம் தொடர்ந்து ராஜஸ்தான் வீரர்கள் ரியான், ராகுல் திவாதியா என்று வரிசையாக அவுட் ஆகி வந்தனர். இதனால் 19வது ஓவரின் கடைசி பந்து வரை யாருக்கு வெற்றி என்றே கணிக்க முடியவில்லை.

ஓவர்

ஓவர்

கடைசி வரை ராஜஸ்தான் அதிரடி காட்டிய நிலையில் கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. இதில் 19வது ஓவரில் ராகுல் திவாதியா விக்கேட் விழுந்து வெறும் 8 ரன்கள் மட்டுமே சென்றது. அதன்பின் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சஞ்சு சிறப்பாக ஆடினார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் ஆரம்பமே சிங்கிள், பின் மீண்டும் சிங்கிள், அதன்பின் சிக்ஸர் என்று நம்பிக்கை கொடுத்தார். இதில் 5வது பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. சஞ்சு சாம்சன் ஸ்டிரைக்கில் இருந்தார். அப்போது பந்தை மிட் ஆன் திசையில் அடித்தவர் சிங்கிள் எடுக்க மறுத்துவிட்டார். சிங்கிள் எடுத்தால் மோரிஸ் கடைசி பாலில் ஸ்டிரைக் எடுத்து இருப்பார்.

ஸ்டிரைக்

ஸ்டிரைக்

ஆனால் சஞ்சு சாம்சன் கடைசி பாலில் ஸ்டிரைக் வேண்டும், சிக்ஸ் அடிக்கலாம் என்று நம்பி சிங்கிள் கொடுக்க மறுத்துவிட்டார். சஞ்சு சாம்சன் இப்படி செய்ததை பார்த்து களத்திலேயே கிறிஸ் மோரிஸ் அதிர்ச்சி அடைந்து முகத்தை சுளித்தார். அதன்பின் கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சஞ்சு சாம்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

மோசம்

மோசம்

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி ஸ்டிரைக் கொடுக்காமல் போனது தவறு என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் செய்தது சரிதான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். சஞ்சுதான் நீண்ட நேரம் களத்தில் இருந்தார். அவருக்குத்தான் பால் எப்படி வரும் என்று தெரியும்.

தெரியும்

தெரியும்

கிறிஸ் மோரிஸ் அப்போதுதான் வந்தார். அவர் முதலில் ஆடிய பந்துகளில் பெரிதாக அடிக்கவில்லை. இதனால் சஞ்சு ஸ்டிரைக் எடுத்தது சரியே. அதோடு சஞ்சு அந்த ஓவரில்தான் சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் கடைசி பாலிலும் கிட்டத்தட்ட சிக்ஸ் அடித்துவிட்டார். பந்து மிகவும் ஸ்லோவாக வந்ததால் பவுண்டரி கோட்டை தாண்ட முடியவில்லை.

சரி

சரி

அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. மற்றபடி சஞ்சு செய்தது சரிதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதோடு சஞ்சு செய்தது சரி என்று ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்காராவும் பாராட்டி உள்ளார். அவர் எடுத்த முடிவு சரியானது என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 13, 2021, 9:04 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
IPL 2021: Why Sanju Samson did not give single to Chris Morris at last over in Punjab vs RR match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X