For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ளே ஆஃப் சுற்றில் ஜட்டு, பும்ராவுக்கு ஓய்வா?... பேச்சுவார்த்தையில் பிசிசிஐ.. கரார் காட்டும் அணிகள்

அமீரகம்: ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளின் போது இந்தியாவின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அனைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு சென்றடைந்து தற்போது பயிற்சி முகாம்களையும் தொடங்கிவிட்டன.

ஐபிஎல்: குழப்பத்தில் இருக்கும் தோனி.. முதல் போட்டியே மும்பையுடன்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதோ! ஐபிஎல்: குழப்பத்தில் இருக்கும் தோனி.. முதல் போட்டியே மும்பையுடன்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதோ!

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

இந்திய வீரர்கள் ஏற்கனவே அமீரகத்தில் குவாரண்டைனை முடித்துவிட்டனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தற்போது குவராண்டைன் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போட்டி தொடங்குவதற்கு தயாராகிவிடுவார்கள். இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொள்ளவுள்ளது.

என்ன விவாதம்

என்ன விவாதம்

ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ள நிலையில் தற்போது வருத்தமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் ( அக்டோபர் 17) முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதில் அக்டோபர் 24ம் தேதியன்று இந்திய அணி முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 2 மாதங்கள் வீரர்கள் ஓய்வின்றி இருந்தனர். தற்போது டி20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் கடும் மன அழுத்தம் இருக்கும் என கூறப்படுகிறது.

அணி நிர்வாகங்கள் கரார்

அணி நிர்வாகங்கள் கரார்

எனவே ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது இந்திய அணி விராட் கோலி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ -ம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விடாப்படியாக உள்ளன. தற்போது இருக்கும் முக்கிய இலக்கு ஐபிஎல் கோப்பை மட்டுமே என்பதால் அதில் கண்டிப்பாக வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Story first published: Thursday, September 16, 2021, 21:23 [IST]
Other articles published on Sep 16, 2021
English summary
Will IPL Teams give rest for Indian Players in Play offs ahead of t20 worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X