For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல் தொடர்: 7 அணிகளில் முக்கிய வீரர்கள் விலகல்.. மாற்று வீரர்கள் அறிவிப்பு.. முழு விவரம்!

துபாய்: ஐ.பி.எல். தொடரில் 7 அணிகளில் சில வீரர்கள் விலகி விட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 14-வது ஐ.பி.எல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடந்தது. மொத்தம் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் சில அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இதனால் ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருவிழா

திருவிழா

இதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகிறன்றன. இன்னும் 31 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நடப்பு சீசன் இரண்டாம் பாதி ஐ.பி.எல். தொடரில் இருந்து பல்வேறு அணிகளை சேர்ந்த ஏரளாமான வீரர்கள் விலகி விட்டனர்.

 7 அணிகள்

7 அணிகள்

அதாவது டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 7 அணிகளில் சில வீரர்கள் வெளியேறி விட்டதால் மாற்று வீரர்கள் அறிவிக்கிப்பட்டு உள்ளனர். டெல்லி கேபிடல்சை பொறுத்தவரை ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக பென் துவார்ஷூயிஸை கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் துவார்ஷூயிஸ் இதுவரை 82 டி 20 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இதேபோல் எம் சித்தார்த்துக்கு பதிலாக இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா வந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மொஹ்சின் கானுக்கு பதிலாக குஜராத்தின் இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ரூஷ் கலாரியாவை தங்கள் அணிக்கு கொண்டு வந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஜில் ரிச்சர்ட்சன் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோரின் மாற்று வீரர்களாக அடில் ரஷித் மற்றும் நாதன் எல்லிஸ் பெயரை சேர்ந்துள்ளது. இதேபோல் இங்கிலாந்தின் டேவிட் மாலன் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் ஏடன் மார்க்ரம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஓஷேன் தாமஸ், எவின் லூயிஸ் ஆகியோரை கொண்டு வந்துள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான தாமஸ் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ்காக ஏற்கனேவே விளையாடி இருக்கிறார். இடது கை பேட்ஸ்மேனான லூயிஸ் 45 டி20 போட்டிகளில் விளையாடி 158.03 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1318 ரன்கள் எடுத்துள்ளார்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காயமடைந்த தமிழ்நாட்டின் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மேற்கு வங்காள வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை தேர்வு செய்துள்ளது. இதேபோல் பெங்களுரு அணி ஆடம் ஜாம்பா, டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த ஹசரங்கா, துஷ்மந்த சமீரா, ஜார்ஜ் கார்டன் மற்றும் டிம் டேவிட்டை கொண்டு வந்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பெயர்ஸ்டோவுக்கு மாற்றாக ஷெர்பேன் ரூதர்போர்டை அணிக்கு கொண்டு வந்துள்ளது. 7 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள ரூதர்போர்டு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடி உள்ளார்.

Story first published: Sunday, September 19, 2021, 19:45 [IST]
Other articles published on Sep 19, 2021
English summary
IPL Some players from the 7 teams in the series have been left out and replacements have been announced. Sunrisers Hyderabad have brought in Sherbane Rutherford to replace England wicketkeeper-batsman Johnny Bairstow
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X