ஆர்சிபி தோற்றது எதனால்?? போட்டியில் நடந்த 2 முக்கிய தவறுகள்.. டூப்ளசிஸே ஒப்புக்கொண்ட உண்மை - விவரம்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அர்சிபி அணி மோசமாக தோற்றதுக்கு 2 காரணங்கள் உள்ளது.

Rr vs RCB Jos Buttler ருத்ர தாண்டவம்! RCB தோற்றது எப்படி? | #Cricket

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஆர்சிபி அணியின் கோப்பை கனவு தகர்ந்தது. ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி?? பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி??

ஆர்சிபி அணி தோல்வி

ஆர்சிபி அணி தோல்வி

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணங்கள்

தோல்விக்கான காரணங்கள்

இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தை டூப்ளசிஸ் சாதாரணமாக எடுத்துக்கொண்டது தான் முதல் தவறு. டாஸில் பேசியிருந்த அவர், முதலில் பேட்டிங் செய்ய தான் நானும் யோசித்திருந்தேன். இந்த பிட்ச்-ல் நல்ல ஸ்கோரை அடிக்கலாம் எனக் கூறினார். பெரிய போட்டிகளில் 2வது பவுலிங் வீசுவது சிறப்பாக இருக்கும் என்பது தான் தனது ஃபார்முலா என்று கருதினார்.

மற்றொரு தவறு என்ன

மற்றொரு தவறு என்ன

இரண்டாவது தவறு தினேஷ் கார்த்திக் செய்தது. ராஜஸ்தான் அணியை ஒற்றை ஆளாக காப்பாறியது ஜாஸ் பட்லரின் சதம் தான். ஆட்டத்தின் 11வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை, பட்லர் ட்ரைவ் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து பேட்டில் எட்ஜானது. அழகாக வந்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

அப்போது பட்லரின் ஸ்கோர் 66 ரன்கள் ஆகும். அந்த சமயத்திலேயே விக்கெட் எடுத்திருந்தால், ஆட்டத்தில் ஏதேனும் திருப்புமுனை ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால் ராஜஸ்தான் அணியில் மற்ற வீரர்கள் ஃபார்மில் இல்லை. இந்த ஒரு கேட்ச்-ஐ தவறவிட்டது, ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக சென்றுவிட்டது. மொத்தத்தில் ஆர்சிபி அணிக்கு நேற்று அதிர்ஷ்டம் இல்லை எனத் தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reason behind RCB loss ( ஆர்சிபி அணிக்கான தோல்வி ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோற்றதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.
Story first published: Saturday, May 28, 2022, 11:20 [IST]
Other articles published on May 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X