For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 புதிய ஐபிஎல் அணிகளின் ஏலம் நிறைவு.. திடீர் ட்விஸ்ட் கொடுக்கும் பிசிசிஐ.. வெற்றியாளர்கள் யார்?

அமீரகம்: ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளின் ஏலம் முடிவடைந்தது. யார் ஏலம் எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022: மலைக்க வைக்கும் Teams Auction Price | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் கொண்டு வரவிருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி 2 அணிகளை ஏலம் விடும் பணிகளும் நடைபெற்றன.

2 புதிய அணிகள் எந்த ஊரை சேர்ந்ததாக இருக்கப்போகிறது, யார் வாங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

“அந்த 3 பிரச்னைகள் தான் காரணம்”.. பாகிஸ்தானுடனான தோல்வி.. கேப்டன் விராட் கோலியின் நியாயமான விளக்கம்! “அந்த 3 பிரச்னைகள் தான் காரணம்”.. பாகிஸ்தானுடனான தோல்வி.. கேப்டன் விராட் கோலியின் நியாயமான விளக்கம்!

ஏலம் விடும் தேதி

ஏலம் விடும் தேதி

இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் இன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதற்கான IIT எனப்படும் விண்ணப்ப படிவங்களை 22 பெரும் நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இதனை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஆனால் 10 நிறுவனங்களுக்கும் குறைவாகவே ஏலத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. ஏலம் வாங்குவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஏலம் எடுக்கும் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு குறைந்தது ரூ.2000 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம்

விண்ணப்ப விநியோகம்

2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமம், மான்செஸ்டர் யுனைட்டெட், ஆரோபிண்டோ பார்மா நிறுவனங்கள் கடுமையாக போட்டிப்போட்டன. இதே போன்று அயல்நாட்டை சேர்ந்த பணம் முதலீட்டு நிறுவனங்களும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

யார் வெற்றியாளர்கள்

யார் வெற்றியாளர்கள்

இந்நிலையில் 2 அணிகளுக்குமான ஏலம் நிறைவடைந்துவிட்டது. ஒரு அணி அகமதாபாத் நகரத்தை சேர்ந்ததாகவும், மற்றொரு அணி லக்னோவை சேர்ந்ததாகவும் இருக்கப்போகிறது. அதன்படி சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ரூ. 5,200 கோடிக்கு அகமதாபாத் அணியையும், சஞ்சிவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குரூப்ஸ் ரூ.7,200 கோடிக்கு லக்னோ அணியையும் வாங்கியுள்ளன.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ.2000 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் இந்த ஆரம்ப தொகையானது ரூ.1700 கோடிதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது. இந்நிலையில் 2 அணிகளை விற்றது மூலம் ரூ. 12,400 கோடி வருமானம் ஈட்டியுள்ளது பிசிசிஐ.

Story first published: Tuesday, October 26, 2021, 9:34 [IST]
Other articles published on Oct 26, 2021
English summary
2 New IPl teams bidding is closed, Reports says adani and manchester united won the bitting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X