For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“3 முக்கிய காரணங்கள்” ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததன் பின்னணி.. அகமதாபாத் அணி சபாஷ் ப்ளான்!

மும்பை: 3 முக்கிய காரணங்களுக்காக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது அகமதாபாத் அணி நிர்வாகம்.

ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான மெகா ஏலம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் அகமதாபாத் அணி பெரும் ட்விஸ்ட் கொடுத்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தான் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக்கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துள்ளது.

IPL 2022: கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்ட்யா..பெரும் ட்விஸ்ட் கொடுத்த புதிய அணி.. இளம் வீரருக்கு ஆப்புIPL 2022: கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்ட்யா..பெரும் ட்விஸ்ட் கொடுத்த புதிய அணி.. இளம் வீரருக்கு ஆப்பு

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

தொடர் தோல்விகளால் தத்தளித்து வந்த டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் கேப்டன்சி விவகாரத்தில் அந்த அணி ரிஷப் பண்ட்-ஐ முன்னிறுத்தியதால் அதிருப்தியில் அங்கிருந்து வெளியேறினார். மேலும் டெல்லி அணியை பழிவாங்க அகமதாபாத் அணியில் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு கேப்டனாக செயல்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் 3 முக்கிய காரணங்களுக்காக பாண்ட்யாவை கேப்டன் ஆக்கியுள்ளனர்.

அதிக அனுபவம்

அதிக அனுபவம்

முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் நிறைய அனுபவம் உள்ளவர். 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை அணிக்காக அனைத்து இக்கட்டான சூழல்களிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர். எனவே இப்படிபட்டவரை அணியில் வைத்துக்கொள்ளவே புதிதாக வரும் அணி விரும்பும். இதே போல சாம்பியன் அணியான மும்பையை சமாளிக்க வேண்டும் என்றால் அதனை நன்கு புரிந்து வைத்துள்ள பாண்ட்யா தேவை. இதே போல தோனியுடன் அதிக நேரத்தை பாண்ட்யா செலவிட்டுள்ளதால் சிஎஸ்கேவை பற்றியும் பாண்ட்யாவுக்கு நன்றாக தெரிவது கூடுதல் பலம்.

சிறப்பான ஆல்ரவுண்டர்கள்

சிறப்பான ஆல்ரவுண்டர்கள்

ஐபிஎல் தொடரில் பல்வேறு இந்திய ஆல்ரவுண்டர்கள் இருக்கும் போதிலும், யாரும் ஹர்திக் பாண்ட்யா அளவிற்கு பேட்டிங்கில் அதிரடியையும், பவுலிங்கில் முக்கிய திருப்புமுணையையும் ஏற்படுத்துவதில்லை. எனவே அவரை கேப்டனாக நியமித்தால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தனது தாக்கத்தை ஏற்படுத்துவார்.

Recommended Video

IPL 2022: Hardik may lead Ahmedabad Team | OneIndia Tamil
சொந்த ஊர்

சொந்த ஊர்

ஹர்திக் பாண்ட்யாவின் சொந்த ஊர் குஜராத் ஆகும். ஆனால் அவர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஒருமுறை குஜராத் லையன்ஸ் அணி உருவாக்கப்பட்ட போதும் பாண்ட்யா சகோதரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அகமதாபாத் அணி வந்திருப்பதால், சொந்த ஊருக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். இதுமட்டுமின்றி அந்த ஊரின் வீரரை கேப்டனாக நியமித்தால் ரசிகர்கள் மத்தியில் அணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் அகமதாபாத் அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

Story first published: Monday, January 10, 2022, 20:32 [IST]
Other articles published on Jan 10, 2022
English summary
3 Important reasons behind ahmedabad appointed hardik pandya as captain for IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X