For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. இளம் வீரரை மடக்க பல கோடி ரெடி.. திட்டத்தை உடைத்த சீனியர்!

சென்னை: மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என முன்னாள் வீரர் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வரும் ஜனவரி மாதத்தில் மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.

ஒவ்வொரு அணியும் தங்களது முக்கிய வீரர்களை கழட்டிவிட்டதால், ஏலத்தின் போது என்னென்ன திட்டங்களை வைத்திருக்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐபிஎல் 2022ல் மாற்றம்? பயத்தில் தத்தளிக்கும் புதிய அணி..பிசிசிஐ எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை- விவரம்ஐபிஎல் 2022ல் மாற்றம்? பயத்தில் தத்தளிக்கும் புதிய அணி..பிசிசிஐ எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை- விவரம்

ஆர்சிபி திட்டம்

ஆர்சிபி திட்டம்

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணி இந்தாண்டு ஏலத்தில் தீவிர கவனம் செலுத்துகிறது. அந்த அணி தற்போது விராட் கோலி ( ரூ.15 கோடி), மேக்ஸ்வெல் ( ரூ.11 கோடி), முகமது சிராஜ் ( ரூ.7 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. அந்த அணியின் முக்கிய ஸ்பின்னரும், கோலியின் நம்பிக்கை வீரருமான யுவேந்திர சஹால் இந்த முறை கழட்டிவிடப்பட்டுள்ளார்.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

இந்நிலையில் சஹாலுக்கு மாற்று வீரராக இளம் வீரர் ஒருவரை பெரும் பணத்தை கொடுத்து எடுக்க ஆர்சிபி குறிவைத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் மிகச்சிறந்த ஸ்பின்னரான சாஹால், மெகா ஏலத்திற்கு முன்பே புதிய அணிக்கு சென்றுவிடுவார். ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்டான சின்னசுவாமி மைதானத்தில் லெக் ஸ்பின்னர்களால் மட்டும் தான் சிறப்பாக செயல்பட முடியும். எனவே சாஹலுக்கு பதிலாக ராகுல் சஹார் தான் சரியான தேர்வாக இருப்பார்.

என்ன காரணம்

என்ன காரணம்

ரஷித் கான் ஏற்கனவே புதிய அணியால் குறிவைக்கப்பட்டார். அதனால் ஆர்சிபி அணி அவரை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ராகுல் சஹாரை எவ்வளவு பணம் செலவளித்தாவது வாங்கிவிட ஆர்சிபி அணி முணைப்பு காட்டும். அவருக்கு அடுத்தபடியாக பார்த்தால் ரவி பிஸ்னாய் நல்ல தேர்வாக் இருப்பார். ஆனால் ராகுலை எடுப்பது சிறந்தது.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

இதே போல ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதில் அவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தான் ஆர்சிபியின் கேப்டன்சி பதவிக்கு வருவார் என நினைகிறேன். சின்னசாமி பிட்ச் மற்றும் கேப்டன்சி திறமைகள் என பலவற்றையும் வைத்து பார்த்தால் ஹோல்டரை தான் ஆர்சிபி குறிவைக்கும். அவர் இதற்கு முன்னர் கேப்டனாக பல வெற்றிகளை கண்டுள்ளார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 2, 2021, 19:49 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
Aakash Chopra Opens up on RCB's Strategy in Mega auction of IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X