“ஓய்வு வயதில் இருந்தாலும் பரவாயில்லை” முன்னணி வீரரை வாங்கத்துடிக்கும் சிஎஸ்கே.. சீனியர் கூறிய தகவல்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஒரு வீரர், மீண்டும் அந்த அணிக்கே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டதால் மெகா ஏலத்தின் மீது எதிர்பார்ப்புகள் தொடங்கிவிட்டன.

வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

“தோனி கற்றுக்கொடுத்த வித்தை”.. முழு உடற்தகுதி பெற்ற ஹர்திக் பாண்ட்யா.. ஐபிஎல் குறித்து மனம் திறப்பு!“தோனி கற்றுக்கொடுத்த வித்தை”.. முழு உடற்தகுதி பெற்ற ஹர்திக் பாண்ட்யா.. ஐபிஎல் குறித்து மனம் திறப்பு!

 ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கேவை வயதானவர்களின் அணி என விமர்சனங்கள் உள்ளன. இந்த முறை இளம் வீரர்களை அதிகளவில் எடுக்குமா அல்லது அனுபவம் மிகுந்த வீரர்களை எடுக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

இந்நிலையில் ஓய்வு வயதில் இருக்கும் ஒரு வீரரை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வரை அந்த அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்த ஃபாப் டூப்ளசிஸ் தான் அது. ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட்டுடன் சேர்ந்து அவர் அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே பல வெற்றிகளுக்கு காரணமானது.

அகாஷ் சோப்ரா கருத்து

அகாஷ் சோப்ரா கருத்து

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணி வயதை பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்ளும் அணி அல்ல. ருதுராஜுடன் சேர்ந்து டூப்ளசிஸ் நல்ல ஜோடியாக அமைந்துவிட்டார். எனவே அதனை அப்படியே வைத்துக்கொள்ளவே அணி நிர்வாகம் விரும்புகிறது. அவரால் நீண்ட காலம் கிரிக்கெட் ஆட முடியாது. எனினும் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும் எனக்கூறியுள்ளார்.

டூப்ளசிஸ் வயது

டூப்ளசிஸ் வயது

37 வயதாகும் டூப்ளசிஸ் கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்தார். அவர் 633 ரன்களை விளாசியுள்ளார். முதலிடத்தில் டூப்ளசிஸின் ஓப்பனிங் ஜோடியான ருதுராஜ் கெயிக்வாட் 635 ரன்களுடன் ஆரஞ்ச் கேப்பை தட்டிச்சென்றார். எனவே இவர்கள் ஆடுவதை மீண்டும் பார்க்க சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aakash chopra Predicts CSK will target the Senior player in mega auction
Story first published: Wednesday, January 26, 2022, 17:16 [IST]
Other articles published on Jan 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X