For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நிறைவேறாமல் போகும் டேவிட் வார்னரின் கனவு”.. ஐபிஎல் அணிகளின் ஒற்றுமை.. ஆர்சிபி போட்ட பலே திட்டம்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் நீண்ட நாட்களாக போட்டு வரும் திட்டம் நிறைவேறாமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டேவிட் வார்னருக்கு கடந்தாண்டு மோசமாக அமைந்தது.

அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மெகா ஏலம் சமயத்தில் கழட்டிவிடப்பட்டுள்ளார்.

ஐபிஎல்: “அந்த 10 பேர்.. மெகா ஏலத்தில் பணத்தை வாரி இரைக்க துடிக்கும் அணிகள்.. அவ்வளவு ஸ்பெஷலா? ஐபிஎல்: “அந்த 10 பேர்.. மெகா ஏலத்தில் பணத்தை வாரி இரைக்க துடிக்கும் அணிகள்.. அவ்வளவு ஸ்பெஷலா?

வார்னர் திட்டம்

வார்னர் திட்டம்

எனினும் மெகா ஏலத்தில் டேவிட் வார்னருக்கான மதிப்பு ஏக போகத்திற்கு உள்ளது. இதற்கு காரணம் டி20 உலகக்கோப்பையில் அவர் காட்டிய அதிரடி தான். தொடர் நாயகன் விருது பெற்று, ஐபிஎல்-ல் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஏதேனும் அணிக்கு கேப்டனாக சென்று கெத்து காட்டவும் திட்டமிட்டிருந்தார்.

நிறைவேறுமா?

நிறைவேறுமா?

இந்நிலையில் அதற்கு துளிக்கூட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்த முறை அணி நிர்வாகத்துடன் வார்னருக்கு ஏற்பட்ட மனக்கசப்பை பார்த்த மற்ற அணி நிர்வாகங்களும் வார்னரை கேப்டனாக நியமிக்க தயக்கம் காட்டுகின்றன. அவர் நிர்வாகத்திற்கு கட்டுப்பட மாட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால், அவரின் கையில் கேப்டன்சி கொடுக்க முடியாது என்ற முடிவில் அணிகள் உள்ளன.

முன்னாள் வீரர் விளக்கம்

முன்னாள் வீரர் விளக்கம்

இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் விளக்கமளித்திருந்தார். அதில், பஞ்சாப், கொல்கத்தா, ஆர்சிபி என மூன்று அணிகளுக்கு கேப்டன் தேவைப்படுகிறார். ஆனால் வார்னரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே எடுப்பார்களே தவிர்த்து கேப்டனாக்க மாட்டார்கள். ஏனென்றால் ஐபிஎல் ஒரு குறுகிய வட்டம். இதில் அணி நிர்வாகங்கள் நெருக்கமானதாக இருக்கும். எனவே வார்னரை கேப்டனாக நியமித்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

Recommended Video

IPL 2022 Auction: Valuable Players who will be target by Franchises | OneIndia Tamil
ஆர்சிபியின் திட்டம்

ஆர்சிபியின் திட்டம்

மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணி டேவிட் வார்னரை ஒப்பந்தம் செய்ய அதிக முனைப்பு காட்டும். ஒரு புறம் விராட் கோலி மற்றொரு புறம் ஓப்பனராக வார்னர் இருந்தால், அந்த அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமையும். இதே போல மிடில் வரிசையில் ரன் உயர்த்த மேக்ஸ்வெல் உள்ளார். எனவே ஆர்சிபி அணி பல கோடிகளை செலவு செய்தாவது வார்னரை தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, January 29, 2022, 11:04 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Aakash Chopra Explains why david warner is not a captaincy option for IPL 2022 teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X