“தோனி கற்றுக்கொடுத்த வித்தை”.. முழு உடற்தகுதி பெற்ற ஹர்திக் பாண்ட்யா.. ஐபிஎல் குறித்து மனம் திறப்பு!

மும்பை: தோனி கற்றுகொடுத்த ஒரு விஷயத்தால், ஐபிஎல் 2022ம் ஆண்டில் கம்பேக் கொடுப்பேன் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர் மோசமாக அமைந்துள்ளது.

கடந்த 2 சீசன்களாக பவுலிங்கே வீசாமல் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கழட்டிவிட்டுள்ளது.

கோலி தான் கேப்டன்..ஆனால் வீரர்கள் எல்லாம் தோனி பேச்சை தான் கேட்பாங்க – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்கோலி தான் கேப்டன்..ஆனால் வீரர்கள் எல்லாம் தோனி பேச்சை தான் கேட்பாங்க – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

 ஐபிஎல் 2022

ஐபிஎல் 2022

பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்திக் பாண்ட்யா மீது அதீத நம்பிக்கை வைத்த அகமதாபாத் அணி, இந்த முறை அவரை கேப்டனாக நியமித்து ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டாம் எனக்கூறிவிட்டு, பாண்ட்யாவை சேர்த்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

பாண்ட்யா தயார்

பாண்ட்யா தயார்

இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். அதில், நான் ஆல்-ரவுண்டராக தயாராகி வருகிறேன். ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும் என்ற மன உறுதி என்னிடம் வந்துள்ளது. என் உடலில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஐபிஎல்-ல் நான் ஆல்-ரவுண்டராகத்தான் விளையாடுவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

புகழ்ந்த ஹர்திக்

புகழ்ந்த ஹர்திக்

மேலும், முழு உடற்தகுதி பெற்றதற்கு தோனியே காரணம் என அவர் கூறியுள்ளார். நான் எல்லோரிடமும் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக தோனியிடம் இருந்து கற்றுள்ளேன். நான் முதன் முதலில் அவரிடம் சென்ற போது, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் தவறு செய்வதை அவர் அறிவார். இருப்பினும் அதற்கு அனுமதிப்பார். ஏனென்றால் தாம் செய்யும் தவறில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கக்கூடியவர் அவர். நானும் பல தவறுகளை செய்து நிறைய மாற்றிக்கொண்டுள்ளேன்.

Hardik Pandya முதல் Rashid Khan வரை.. வலுவான அணியாக மாறிய Ahmedabad
தோனி குணம்

தோனி குணம்

நாம் ஒவ்வொரு விஷயத்தை கற்கும் போதும், அதற்கு நான் தான் காரணம் என்பது போல தோனி என்றுமே காட்டிக்கொள்ள மாட்டார். நாமாகவே கற்றுக்கொண்டது போல தான் அவரின் செயல்கள் இருக்கும். ஆனால் எப்போதுமே தோனிதான் எனது மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளார் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik Pandya gives a credit to MS Dhoni for Grooming Him, said he will be a fine all rounder in IPL 2022
Story first published: Tuesday, January 25, 2022, 19:53 [IST]
Other articles published on Jan 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X