இந்தியா குறித்து அவதூறு பேச்சு.. அஃப்ரிடி போட்ட மோசமான பதிவு.. அமித் மிஸ்ரா தந்த தரமான பதிலடி-விவரம்

மும்பை: இந்தியா குறித்து அவதூறாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு அமித் மிஸ்ரா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

India பற்றி விமர்சனம்.. Shahid Afridi-க்கு பதிலடி கொடுத்த Amit Mishra #Cricket

காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாக மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு காரணம் யாசின் மாலிக்கிற்கு வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு ஒன்று.

ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்; காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

யாசின் மாலிக், தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் காஷ்மீர் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. பல முக்கிய பிரபலங்களும் இதில் கருத்துக்கூறி வருகின்றனர்.

அஃப்ரிடியின் சர்ச்சை பதிவு

அஃப்ரிடியின் சர்ச்சை பதிவு

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி அதிரடி கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் " இந்திய அரசு, தான் செய்யும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்குகிறது. ஆனால் யாசின் மாலிக்கின் ஆயுள் தண்டனை காஷ்மீரின் சுதந்திர போராட்டத்தை தடுக்காது. ஐக்கிய நாடுகள் சபை இதை தட்டிக்கேட்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 மிஷ்ராவின் பதிலடி

மிஷ்ராவின் பதிலடி

ஆனால் இதற்கு இந்திய வீரர் அமித் மிஷ்ரா தரமான பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த ட்வீட்டில், அன்புமிகுந்த அஃப்ரிடி அவர்களே, யாசின் மாலிக்கே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் பிறந்த தேதியில் கூட தவறான தகவலை பரப்பியுள்ளீர்கள். ஆனால் இங்கு யாரும் தவறான தகவலை பரப்பவில்லை. அனைத்தும் நியாயப்படியே நடக்கிறது எனக் கூறியுள்ளார்.

 பிறந்த தேதி சர்ச்சை

பிறந்த தேதி சர்ச்சை

ஐசிசி உள்ள ஆவணங்களின்படி சாஹித் அஃப்ரிடியின் பிறந்த தேதி மார்ச் 1, 1980ம் ஆண்டு என உள்ளது. ஆனால் அஃப்ரிடி தான் எழுதிய " கேம் சேஞ்சர்" என்ற சுயசரிதை புத்தகத்தில் 1975ம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Amit Mishra reply to Shahid Afridi ( சாஹித் அஃப்ரிடிக்கு அமித் மிஸ்ரா தரமான பதிலடி ) இந்தியா குறித்து அவதூறாக பேசிய சாஹித் அஃப்ரிடிக்கு இந்திய வீரர் அமித் மிஸ்ரா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
Story first published: Wednesday, May 25, 2022, 17:42 [IST]
Other articles published on May 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X