For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் ரன்வீர் சிங் வரை.. ஐபிஎல் கலைநிகழ்ச்சியில் பங்கேற்பு.. பிசிசிஐ பிரம்மாண்ட ஏற்பாடு!

மும்பை: ஐபிஎல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஐபிஎல் கலை நிகழ்ச்சிக்காக பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

15வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது வரை குஜராத் அணி மட்டும் ப்ளே ஆஃப் இடத்தை உறுதிசெய்துவிட்ட நிலையில், மற்ற அணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றன.

ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்.. காயம் தான் காரணமா? இல்லை விரிசலா? ரெய்னாவுக்கு நேர்ந்த அதே கதிஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்.. காயம் தான் காரணமா? இல்லை விரிசலா? ரெய்னாவுக்கு நேர்ந்த அதே கதி

ஐபிஎல் கலை நிகழ்ச்சிகள்

ஐபிஎல் கலை நிகழ்ச்சிகள்

ஐபிஎல் தொடரில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்த போதும், ரசிகர்களுக்கு ஒரு குறை இருந்துக்கொண்டே தான் இருந்தது. வழக்கமாக ஐபிஎல் தொடர் கலை நிகழ்ச்சிகளுடன் தான் தொடங்கும். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில் தான் அந்த குறையை தீர்க்க ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

புது முடிவு

புது முடிவு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுடன் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் மற்றும் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆகியவையை குறிவைத்து கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

பங்கேற்பவர்கள்

பங்கேற்பவர்கள்

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், '83' திரைப்பட புகழ் ரன்வீர் சிங் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளில் இருந்து ஆலியா பட் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட் குடும்பம் இணைவதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

Recommended Video

India அணியில் எதிர்காலம் என்ன? BCCI அதிகாரி கூறிய தகவல் | Oneindia Tamil
எப்போது நிகழ்ச்சி

எப்போது நிகழ்ச்சி

ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகள் வரும் மே 24ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி 29ம் தேதி மோதிரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு மட்டும் முழு அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Wednesday, May 11, 2022, 21:56 [IST]
Other articles published on May 11, 2022
English summary
IPL 2022: AR Rahman and Ranveer singh Likely to participate in IPL Closing ceremony
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X