அஸ்வின் தான் ராஜஸ்தானின் பெரும் பிரச்சினையே.. 2 முக்கிய விஷயம்.. ஆதாரத்துடன் கூறிய மஞ்ச்ரேக்கர்!

அகமதாபாத்: ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய பிரச்சினையே ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

பட்லரின் வீக்னஸ் இதுதான்.. 2 பவுலர்களுக்கு ஆர்சிபி ஸ்பெஷல் பயிற்சி.. சரியாக நடந்தால் வெற்றி உறுதி!பட்லரின் வீக்னஸ் இதுதான்.. 2 பவுலர்களுக்கு ஆர்சிபி ஸ்பெஷல் பயிற்சி.. சரியாக நடந்தால் வெற்றி உறுதி!

ராஜஸ்தானின் கட்டாயம்

ராஜஸ்தானின் கட்டாயம்

முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய போட்டியில் கம்பேக் கொடுத்தால் தான் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதற்காக தவறுகள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து சரி செய்து வருகிறார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

மஞ்ச்ரேக்கர் பளீச் பதில்

மஞ்ச்ரேக்கர் பளீச் பதில்

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முக்கிய பிரச்சினையே அஸ்வின் தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அஸ்வின் எப்போதுமே பல வேரியேஷங்களை முயற்சி செய்து பார்க்கிறார். பேட்டிங்கிற்கு சாதகமாகவும், பந்து டேர்னே ஆகாத பிட்ச்-லும் அஸ்வின் எடுக்கும் புதிய முயற்சிகள் ரன்களை வாரி வழங்குகின்றன. இதனை தெரிந்தும் முக்கிய போட்டிகளில் அஸ்வின் சோதித்து பார்த்து வருகிறார். அவரை சரிசெய்யுங்கள் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

கூறியது சரிதானோ

கூறியது சரிதானோ

அவர் கூறியதை போன்றே முதல் குவாலிஃபரையில் அஸ்வின் சொதப்பினார். குஜராத் அணிக்கு எதிராக 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவ்வளவு ரன்கள் சென்றதற்கு காரணம், புதுவித முயற்சிகளை எடுத்தது தான் எனத்தெரிகிறது. எனினும் அஸ்வினின் முயற்சிகள் அவ்வபோது கைக்கொடுப்பதும் குறிப்பிடத்தக்க வேண்டியது தான்.

2வது பிரச்சினை என்ன

2வது பிரச்சினை என்ன

தொடர்ந்து பேசிய மஞ்ச்ரேக்கர், ராஜஸ்தானுக்கு டெத் ஓவர்களும் சரியில்லை எனக்கூறியுள்ளார். ட்ரெண்ட் போல்ட் டெத் ஓவர்களில் சொதப்புபவர். ஆனால் பவர் ப்ளேவில் நன்கு வீசக்கூடியவர். ஆனால் போல்ட்-யை சரியான இடத்தில் பயன்படுத்துவதில்லை. டெத் ஓவர்களுக்கு பிரஷித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய் ஆகியோர் பயன்படுவார்கள் என்பதால் போல்ட்-ஐ முன்கூட்டியே உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்சிபிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: "Ashwin is the Problem for RR" Sanjay Manjrekar points out RR mistakes ahead of RCB Clash
Story first published: Friday, May 27, 2022, 17:57 [IST]
Other articles published on May 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X