For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: முற்றிலும் மாறுபட்ட விதிமுறைகள்.. 2 புதிய அணிகளின் வருகையால்.. பிசிசிஐ பலே ப்ளான்!

மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரே இன்னும் முடிவடையாத சூழலில் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

அதிகப்படியான எதிர்பார்ப்புக்கு காரணம் அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்கப்படுவதுதான். இதற்கான பணிகளிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

ஐபிஎல் 2021: 'முரட்டுத்தனமான தேர்வு’.. வெஸ்ட் இண்டீஸின் பவர் ப்ளேயர்ஸை தட்டித்தூக்கிய ராஜஸ்தான் அணி! ஐபிஎல் 2021: 'முரட்டுத்தனமான தேர்வு’.. வெஸ்ட் இண்டீஸின் பவர் ப்ளேயர்ஸை தட்டித்தூக்கிய ராஜஸ்தான் அணி!

மெகா ஏலம்

மெகா ஏலம்

ஐபிஎல் 2022 முதல் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஐபிஎல் சிக்கல்

ஐபிஎல் சிக்கல்

இதுமட்டுமல்லாமல் ஆட்ட முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இருக்கும் முறைபடி பார்த்தால், 2 புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். மேலும் கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் அதற்கு தேவைப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

புது முறை

புது முறை

அதாவது, தற்போதைய விதிமுறை படி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன் பின்னர் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் புதிய நடைமுறையில், மொத்தம் உள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக ( தலா 5) பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை போட்டியிட்டு, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.

ஏலத்தில் மாற்றம்

ஏலத்தில் மாற்றம்

இந்த 2 புதிய அணிகளுக்காக ஏல முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் எனக்கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Right to match

Right to match

மேலும் இந்த மெகா ஏலத்தில் Right ot Match Card ஐ பயன்படுத்த முடியாது. RTM என்பது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் தாங்கள் விடுவித்த வீரரை மீண்டும் பழைய தொகைக்கே ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் மற்ற அணிகளுடனான ஏல போட்டி குறையும். ஆனால் இதனையும் அடுத்தாண்டுக்கான ஏலத்தில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கையால் புதிதாக வரும் 2 அணிகளுக்கும் முன்னணி வீரர்கள் கிடைப்பார்க என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, September 1, 2021, 19:15 [IST]
Other articles published on Sep 1, 2021
English summary
BCCI likely to make new formats from IPl 2022, Officer confirmed it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X