For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ல் சொதப்பும் வீரர்கள்.. இந்திய அணியில் எதிர்காலம் என்ன.. மூத்த அதிகாரி கூறிய தகவல்!

மும்பை: ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என அதிகாரி கூறியுள்ளார்.

15வது ஐபிஎல் சீசன் தொடர் 50 லீக் போட்டிகளை கடந்து தற்போது ப்ளே ஆஃப் சுற்றை எட்டி வருகிறது.

5 வருட சம்பள தொகை.. பிரித்வி ஷா என்ன செய்தார் தெரியுமா.. ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்!! 5 வருட சம்பள தொகை.. பிரித்வி ஷா என்ன செய்தார் தெரியுமா.. ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

இந்த சீசனில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா போன்ற அணிகள் சொதப்பி வருகின்றன.

நடசத்திர வீரர்கள் சொதப்பல்

நடசத்திர வீரர்கள் சொதப்பல்

சாம்பியன் அணிகள் தான் சொதப்புகின்றன என்று பார்த்தால், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலரும் சொதப்பி வருவது தான் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்களான இஷான் கிஷான், ரோகித் சர்மா இருவருமே ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். கே.எல்.ராகுல் ஓரளவிற்கு தான் அதிரடி காட்டுகிறார்.

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்களும் தற்போது வரை பழைய ஸ்ட்ரைக் ரேட்டிற்கு வரவில்லை. ஃபினிஷர்களில் இன்னும் மோசமாக ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். அவர் டாப் ஆர்டரில் களமிறங்கிய போதும், பெரிதாக ரன் அடிக்க முடியவில்லை.

இந்திய அணியில் வாய்ப்பு

இந்திய அணியில் வாய்ப்பு

வீரர்கள் இந்த நிலைமையில் இருந்தால், இந்திய அணி எப்படி டி20 உலகக்கோப்பைக்கு செல்லும் என்ற கவலை உருவாகியுள்ளது. அடுத்ததாக வரவுள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் கூட இவர்களுக்கு ஓய்வுக்கொடுத்து ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இருந்து வருவதாக தகவல் வெளியானது.

Recommended Video

IPL-ன் Successful Run Chases! No Loss-ல் Finish செய்த 6 Matches | OneIndia Tamil
அதிகாரி பகிர்ந்த தகவல்

அதிகாரி பகிர்ந்த தகவல்

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ஐபிஎலில் விளையாடுவதை சர்வதேச போட்டிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. ஒரேயொரு தொடரில், அதுவும் புதுமுக வீரர்களுக்கு எதிராக ஆடுவதை வைத்து இந்திய வீரர்களை எடைபோடுவது எந்த விதத்தில் ஞாயம். தற்போது சொதப்புபவர்கள், முன்பு சர்வதேச அளவில் கலக்கியவர்கள் தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே அணித்தேர்வு அப்போதைய சூழல் பொறுத்து தான் இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 6, 2022, 15:42 [IST]
Other articles published on May 6, 2022
English summary
BCCI official on Form out players ( ஐபிஎல்-ல் சொதப்பும் வீரர்கள் குறித்து பிசிசிஐ அதிகாரி பேச்சு ) ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் முன்னணி வீரர்களின் இந்திய அணி எதிர்காலம் குறித்து பிசிசிஐ அதிகாரி பேசியுள்ளார். v
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X