For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த 3 இடங்களில் தான் ஐபிஎல் போட்டிகள்”.. இந்தியாவின் முக்கிய இடங்கள் தேர்வு.. பிசிசிஐ இறுதி முடிவு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் எங்கு நடைபெறவுள்ளது என்பது குறித்த இறுதி முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

Recommended Video

IPL 2022: Mumbai city Finalized As Venues For The Tournament | Oneindia Tamil

புதிதாக 2 அணிகள், மெகா ஏலம் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது இருந்தே தொடங்கியுள்ளன.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல்களால், எந்தவொரு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியாமல் பிசிசிஐ திணறி வருகிறது.

“ஒன்னுமே சொல்ல மாட்றாங்க” ஐபிஎல் அணிகளிடம் முக்கிய விஷயத்தை மறைக்கும் பிசிசிஐ.. அதிகரிக்கும் புகார்“ஒன்னுமே சொல்ல மாட்றாங்க” ஐபிஎல் அணிகளிடம் முக்கிய விஷயத்தை மறைக்கும் பிசிசிஐ.. அதிகரிக்கும் புகார்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் 2 வார காலங்களே உள்ள நிலையிலும் ஏலம் நடைபெறும் இடம் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும் என பிசிசிஐ முடிவெடுத்துவிட்டது.

அவசர கூட்டங்கள்

அவசர கூட்டங்கள்

இந்தாண்டு 10 அணிகளுக்காகவும் இந்தியாவின் 10 இடங்களை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை என ஒன்றரை மாத காலம் போட்டிகளை நடந்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த போட்டிகள் அமீரகம், தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு மாறுகிறதா என பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்தன.

இறுதி முடிவு

இறுதி முடிவு

இந்நிலையில் மும்பை நகரத்தில் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மும்பை நகரத்தில் வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் என 3 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடந்த உகந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல், மே மாதங்களில் இங்கு வேறு எந்த உள்ளூர் போட்டிகளும் நடைபெறாத வண்ணம் பிசிசிஐ புக் செய்து வைத்துள்ளது.

வீரர்கள் பயண திட்டம்

வீரர்கள் பயண திட்டம்

இந்தியாவில் கடந்த முறை நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர், பல்வேறு நகரங்களில் நடந்ததால் கொரோனா அபாயம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை மும்பையில் உள்ள 3 மைதானங்களில் மட்டுமே போட்டிகளில் நடப்பதால் பேருந்து வழி பயணத்தை ஏற்படுத்தி வீரர்களை பாதுகாக்க முடியும். இதே போல வீரர்களின் சிரமங்களை குறைக்க டபுள் எட்டர்ஸும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, February 7, 2022, 16:41 [IST]
Other articles published on Feb 7, 2022
English summary
BCCI eye to host a entire IPL matches in Mumbai city, 3 stadiums are shortlisted
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X