For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? கங்குலியே வியப்பில் கூறிய வார்த்தை தமிழக வீரரும் இருக்கிறார்

மும்பை: ஐபிஎல் தொடரில் 3 இளம் வீரர்களின் ஆட்டம் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs SA தொடரில் இளம் வீரர்கள் யார் யாருக்கு வாய்ப்பு? | Oneindia Tamil

ஐபிஎல் 15வது சீசன் 65 லீக் போட்டிகளை கடந்து ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டது.

ஏற்கனவே குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்ட சூழலில் மற்ற 3 இடங்களுக்குமான போட்டி நடைபெற்று வருகிறது.

முடிவுக்கு வந்தது ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்முடிவுக்கு வந்தது ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்

விறுவிறுப்படையும் ஐபிஎல்

விறுவிறுப்படையும் ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டும் ஜொலிப்பார்கள். குறிப்பாக அயல்நாட்டு வீரர்கள் தான் பொளந்து கட்டுவார்கள். ஆனால் இந்தாண்டு முழுக்க முழுக்க உள்நாட்டு வீரர்கள் பலரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சாஹா, ரகானே, சஹால், குல்தீப் போன்ற முன்னணி வீரர்கள் கம்பேக் தந்துள்ளனர்.

இளம் வீரர்கள் அசத்தல்

இளம் வீரர்கள் அசத்தல்

இது ஒருபுறம் இருக்க, புதுமுக வீரர்கள் பலரும் சீனியர்களுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். சென்னை அணியில் முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் ஆகியோர் தொடக்கத்தில் சொதப்பினர். ஆனால் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். இதே போல உம்ரான் மாலி, யாஷ் தயால், மோசின் கான், குல்தீப் சன், ஆகியோரும் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

கங்குலி தேர்வு

கங்குலி தேர்வு

இந்நிலையில் இவர்களுக்கான இந்திய அணி வாய்ப்பு கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. ஏனென்றால் பிசிசிஐ தலைவர் தனக்கு பிடித்த 3 வீரர்களை தேர்வு செய்துள்ளார். அதில், அவர், எனது தேர்வில் முதலில் உம்ரான் மாலிக் தான் இருக்கிறார். எத்தனை பேரால் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசிவிட முடியும்? உம்ரான் மாலிக் விரைவில் இந்த அணிக்காக விளையாடினாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனினும் உம்ரான் மாலிக்கை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதிவேகமாக பந்துவீசினாலும், இன்னமும் அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் 2 வீரர்கள்

மேலும் 2 வீரர்கள்

2வது வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலர் குல்தீப் சன்னும் தொடர்ந்து அபாரமாக பந்துவீசுகிறார். இதே போல ஐதராபாத் அணியில் டி.நடராஜனும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். இவர்கள் தவிர்த்து யாஷ் தயால், மோக்சின் கான், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் ஆகியோர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். விரைவில் இவர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறினார்.

Story first published: Tuesday, May 17, 2022, 13:16 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022: BCCI President Sourav ganguly lists out the Young talents in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X