ஐபிஎல்-ல் தடம் பதிக்கும் ரன்வீர் - தீபிகா படுகோனே.. பெரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. காரணம் என்ன?

அமீரகம்: ஐபிஎல் அணிகளை வாங்கும் ரேஸில் தற்போது பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இணைந்துள்ளனர்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அந்த இரண்டு அணிகளையும் ஏலம் விட்டப்பிற்கு எந்த ஊரை மையமாக கொண்டிருக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.

இரட்டிப்பான பலம்..ஃபெபியன் ஆலனுக்கு மாற்றாக சூப்பர் வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ் கோப்பை உறுதியா?இரட்டிப்பான பலம்..ஃபெபியன் ஆலனுக்கு மாற்றாக சூப்பர் வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ் கோப்பை உறுதியா?

ஏலம் விடும் தோனி

ஏலம் விடும் தோனி

இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான IIT எனப்படும் விண்ணப்ப படிவங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் வாங்குவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஏலம் எடுக்கும் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு குறைந்தது ரூ.2000 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்திற்கு கடும்போட்டி

ஏலத்திற்கு கடும்போட்டி

இதனையடுத்து 2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிர முனைப்புடன் உள்ளது. இதே போன்று அயல்நாட்டை சேர்ந்த பணம் முதலீட்டு நிறுவனங்களும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

பாலிவுட் நட்சத்திரங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்நிலையில் இந்த ரேஸில் தற்போது பாலிவுட் பிரபலங்களான நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். கால்பந்துவீரர் ரொனால்டோ விளையாடி வரும் மேன்செஸ்டர் யுனைட்டெட் கிளப்பின் உரிமையாளர்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஐடிடியை வாங்கியுள்ளனர். எனவே அந்த குழுமத்தினருடன் இணைந்து ரன்வீர் மற்றும் தீபிகா ஜோடி ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

 பாலிவுட் தொடர்புகள்

பாலிவுட் தொடர்புகள்

ஐபிஎல் தொடருக்கும் பாலிவுட் உலகிற்கும் பெரிய அளவில் தொடர்புகள் உண்டு. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஷாருக்கான் மற்றும் நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நடத்தி வருகின்றனர். இதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளராக நடிகை ப்ரீத்தி சிந்தா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Bollywood stars Deepika Padukone, Ranveer Singh Set To Bid For New IPL Team in dubai
Story first published: Friday, October 22, 2021, 13:08 [IST]
Other articles published on Oct 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X