ரெய்னாவை குறிவைத்த சன்ரைசர்ஸ் அணி.. சி.எஸ்.கே. வை விட்டு செல்லும் “சின்ன தல” –வெளியான புதிய தகவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, அணியை விட்டு செல்ல உள்ளது ஏறக்குறைய உறுதியானது.

சென்னை அணிக்காக ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பல்வேறு சாதனைகளை ரெய்னா படைத்துள்ளார்.

எனினும் பார்மில் இல்லாத காரணத்தால் ரெய்னா,கடந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில், சென்னை அணியும் ரெய்னாவை தக்க வைக்கவில்லை

ஐ.பி.எல். 2022- தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு ஏன் இவ்வளவு கம்மியான விலை..!! என்ன பிளான்..?ஐ.பி.எல். 2022- தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு ஏன் இவ்வளவு கம்மியான விலை..!! என்ன பிளான்..?

லக்னோ அணி ஆர்வம்

லக்னோ அணி ஆர்வம்

ரெய்னா தற்போது தனது ஆரம்ப விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். சி.எஸ்.கே. ரெய்னாவை விட்டுள்ளதால், பல முன்னணி அணிகள் ரெய்னாவை பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரெய்னாவின் பூர்வீகம் காஷ்மீராக இருந்தாலும், தற்போது அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார்.

ரெய்னா மறுப்பு

ரெய்னா மறுப்பு

லக்னோ தான், அவரது சொந்த ஊர் என்பதால் ரெய்னாவை ஒப்பந்தம் செய்ய லக்னோ அணி முயற்சித்தது. ஆனால் லக்னோ அணி சொன்ன தொகை ரெய்னாவிற்கு கட்டுப்படியாகவில்லை. ஃபார்மில் இல்லாத ரெய்னா மீதும் பெரிய தொகையை செலுத்த லக்னோ விரும்பவில்லை. எனினும் ஏலத்தில் ரெய்னாவை குறிவைக்க அந்த அணி தயாராக உள்ளது.

டாம் மூடி கருத்து

டாம் மூடி கருத்து

இதனிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இயக்குனர் டாம் மூடி, அளித்துள்ள பேட்டியில் ரெய்னாவை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ரெய்னாவின் அனுபவமும், அதிரடி ஆட்டம் மற்றும் ஃபில்டிங்கும் அணிக்கு தேவை என்பதால் ரெய்னாவை ஏலத்தில் தேர்வு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்

குட் பை சி.எஸ்.கே

குட் பை சி.எஸ்.கே

எனினும் ஏலத்தில் அவரை எடுப்பதில் சுலபம் இல்லை என்றும், பல அணிகளும் போட்டி போடும் என்பதால், ஏலம் அன்றே என்ன நடக்கிறது என்று தெரியும் என்றும் டாம் மூடி தெரிவித்துள்ளார். ரெய்னா குறித்து இதுவரை சென்னை அணி வாய் திறக்காததால் அவர் சென்னையை விட்டு செல்வது உறுதியாகி விட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 CSK Legend Suresh Raina leaves team and SRH Made eye on him ரெய்னாவை குறிவைத்த சன்ரைசர்ஸ் அணி.. சி.எஸ்.கே. வை விட்டு செல்லும் “சின்ன தல” –வெளியான புதிய தகவல்
Story first published: Saturday, January 22, 2022, 16:27 [IST]
Other articles published on Jan 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X