For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“11 பேருமே பேட்ஸ்மேன்கள் தான்”.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம்.. ஐபிஎல்-ல் மிக பலமான அணி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு இளம் வீரர்களை எடுத்த நிலையில் ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் உண்டாகியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் கடைசி வரை ஒரு சில வீரர்களையே எடுத்துவிட்டு நிதானமாக இருந்த சிஎஸ்கே திடீரென கடைசி சிறிது நேரத்தில் 10 வீரர்களுக்கு மேல் சுருட்டியது.

இதில் பெரும்பாலும் U19 மற்றும் இந்திய அணியில் விளையாட வாய்ப்புகாக காத்துக்கொண்டிருக்கும் வீரர்களாகும்.

ஒரே டீமில் இத்தனை ஆல்ரவுண்டரா!!.. சிறந்த ஐபிஎல் அணி எது”.. வியப்பில் ஆடிப்போன ஆகாஷ் சோப்ரா! ஒரே டீமில் இத்தனை ஆல்ரவுண்டரா!!.. சிறந்த ஐபிஎல் அணி எது”.. வியப்பில் ஆடிப்போன ஆகாஷ் சோப்ரா!

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

மொத்தம் 25 வீரர்களை எடுத்துவைத்துள்ள சிஎஸ்கே அணி ப்ளேயிங் 11ல் பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கில் பெரிய காயை நகர்த்தியுள்ளது. இந்நிலையில் அதில் தான் பிரச்சினையே தொடங்கியிருக்கிறது. அதாவது அணியின் 8, 9, 10, 11 இடங்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

டாப் ஆர்டர் என்ன

டாப் ஆர்டர் என்ன

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வாய் ஆகியோர் களமிறங்குவார்கள். 3வது வீரராக மொயின் அலி, அம்பத்தி ராயுடு, கேப்டன் தோனி, ஜடேஜா என அடுத்தடுத்து வீரர்கள் ப்ளேயிங் 11க்கு பொருத்தமாக உள்ளனர். ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கும் ஷிவம் தூபே களமிறங்கலாம். இதில் ஜடேஜா மற்றும் மொயின் ஆகியோரே ஸ்பின்னர்களாக செயல்பட்டுவிடுவார்கள்.

லோயர் ஆர்டர்

லோயர் ஆர்டர்

இதனைத்தொடர்ந்து டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஆடம் மில்னே என 10 பேர் கொண்ட வரிசை சரியாக உள்ளது. ஆனால் கடைசி வீரராக பவுலர் மட்டும் போதும் என்று நினைத்தால் துஷார் தேஷ்பாண்டேவை சேர்ப்பார். மற்றொருபுறாம் இதே போல ராஜ்வர்தன் ஹங்கர்கேகரையும் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஏனென்றால் ராஜ்வர்தன் பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக இருப்பார். மெகா ஏலத்தில் போராடி இவர்களை ஸ்கெட்ச் போட்டுத்தூக்கியுள்ளனர்.

 வெளியேறுவாரா பிராவோ

வெளியேறுவாரா பிராவோ

இந்த 2 இளம் வீரர்களும் சிஎஸ்கேவின் எதிர்காலமாக பார்க்கப்படுவதால் பிராவோ ஓரம் கட்டப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. கடந்த முறையே பிராவோவின் ஃபார்ம் மோசமாக இருந்ததால் சில போட்டிகளில் வெளியே உட்காரவைக்கப்பட்டார். எனவே இந்தமுறையும் அவரை நீக்கிவிட்டு இவர்கள் இருவரை பயன்படுத்தலாம்.

11 பேட்ஸ்மேன்கள்

11 பேட்ஸ்மேன்கள்

ஒருவேளை இதுவே சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 ஆக அமைந்தால் இதனை விட பேட்டிங்கில் பலமான அணி எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த 11 வீரர்களுமே அதிரடி பேட்ஸ்மேன்களாக விளங்குகின்றனர். மேலும் பவுலிங்கிலும் தோனிக்கு 7 தேர்வுகள் வரை உள்ளன. இது மிகப்பெரிய பலமாகும்.

Recommended Video

IPL 2022 Auction: 10-crore club, Salary hikes and cuts | OneIndia Tamil
சிஎஸ்கே ப்ளேயிங் 11 கணிப்பு

சிஎஸ்கே ப்ளேயிங் 11 கணிப்பு

ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ஷிவம் தூபே, பிராவோ, தீபக் சஹார்,

Story first published: Tuesday, February 15, 2022, 19:18 [IST]
Other articles published on Feb 15, 2022
English summary
CSK have a 11 batsmen and 7 bowling options in Playing 11, Dhoni's perfect master plan in Mega auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X