For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் புது இடம்.. 3 வீரர்களின் இடத்திற்கு ஆப்பு..சீனியர் சூப்பர் ஐடியா

மும்பை: இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு புதிய பேட்டிங் இடம் கிடைப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Indian Team-ல் Hardik Pandya-ன் Batting Order-ஐ மாத்துங்க.. Daniel Vittori கருத்து #Cricket

2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

அவரிடம் அதீத திறமை உள்ளது.. சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு ஆதரவு தந்த சங்ககாரா.. அப்படி என்ன ஸ்பெஷல்! அவரிடம் அதீத திறமை உள்ளது.. சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு ஆதரவு தந்த சங்ககாரா.. அப்படி என்ன ஸ்பெஷல்!

அடுத்தடுத்த போட்டிகள்

அடுத்தடுத்த போட்டிகள்

இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது இந்திய அணியின் பக்கம் திரும்பியுள்ளது. இந்திய அணி அடுத்த 6 மாதங்களில் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய சவாலை ஏற்கவுள்ளது. இதற்கான அணி தான் இன்னும் சரியாக முடிவு செய்யப்படாமலேயே உள்ளது. இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் கலந்து இருக்கும்படி டிராவிட் சிந்தித்து வருகிறார்.

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில் ஆர்டர் சிக்கல்

தற்போதைக்கு இந்திய அணியில் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி இருக்கிறார். எனினும் மிடில் ஆர்டரில் தான் தற்போது வரை பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என மூன்று முன்னணி வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரிவரவில்லை.

புதிய பேட்டிங் இடம்

புதிய பேட்டிங் இடம்

இந்நிலையில் அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்ட்யா தான் மிகச்சரியாக இருப்பார் என நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி கூறியுள்ளார். அதில், ஹர்திக் பாண்ட்யாவை 4வது வீரராக பொருத்த முடிந்தால் நிச்சயம் செய்ய வேண்டும். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் பாண்ட்யா 15 இன்னிங்ஸ்களில் 487 ரன்களை டாப் ஆர்டரில் குவித்துள்ளார்.

மாறுபடும் வரிசை

மாறுபடும் வரிசை

நான் சூர்யகுமாரை ஒதுக்க வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால் ஹர்திக் சிறந்த தேர்வு எனக் கூறுகிறேன். தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் 5வது வீரராக களமிறங்கலாம். ரிஷப் பண்ட் 6வது வீரராக அதிரடி காட்ட உதவுவார். இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் ஆழம் சற்று நன்றாக இருக்கும் என விட்டோரி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 31, 2022, 22:38 [IST]
Other articles published on May 31, 2022
English summary
IPL 2022: Daniel vittori suggest the New batting position for Hardik pandya in Team india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X