For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதுதான் ரொம்ப வலிச்சது.. கொடுமை!!” ஐதராபாத் அணியுடனான மனக்கசப்பு.. மனம் கலங்கிய டேவிட் வார்னர்!

சிட்னி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனக்கு கொடுத்த மிகவும் கொடுமையான வலிகள் குறித்து டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கென்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு மோசமாக அமைந்தது.

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தீடீரென அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

காரணம் என்ன

காரணம் என்ன

வீரர்களை தேர்வு செய்வதில் அணி நிர்வாகத்திற்கும் - வார்னருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐதராபாத் அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுத்தார். ஆனால் அதனையெல்லாம் அந்த அணி மறந்துவிட்டு, திடீரென கேப்டனையே புறம்தள்ளியது. குறிப்பாக அவர் களத்திற்கு வெளியில் சோகமாக உட்கார்ந்திருந்த காட்சிகள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது.

வார்னர் மனவேதனை

வார்னர் மனவேதனை

இந்நிலையில் ஐதராபாத் அணியுடனான பிரச்சினை குறித்து வார்னர் முதல் முறையாக பேசியுள்ளார். அதில், நீங்கள் ஒரு கேப்டனை பதவி நீக்கம் செய்கிறீர்கள், அதன் பின்னர் அணிக்குள் கூட சேர்க்கவில்லை. அணிக்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை கூட நினைத்துப்பார்க்காமல் இவற்றை செய்தால், அந்த அணி வீரர்களுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை என்ன? அணியில் உள்ள மற்ற வீரர்கள் " நமக்கும் இதே நிலைமை தான் வரும் போல" என்று நினைத்துவிடுவார்கள். இதுதான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

விவாதம்

விவாதம்

எது எப்படியானலும் நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. உங்களுக்கு அது குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்றால் தைரியமாக செய்யுங்கள். அதில் இருந்து ஓட வேண்டாம். நான் ஒன்றும் கடித்துவிட மாட்டேன். நீங்கள் சொல்லும் காரணங்களை அமைதியாக கேட்க மட்டுமே என்னால் முடியும் என ஐதராபாத் அணியை நோக்கி வார்த்தைகளை விட்டுள்ளார்.

அதிக வலிகள் தந்தன

அதிக வலிகள் தந்தன

ரசிகர்களின் ஏமாற்றங்களும் எனக்கு அதிக வலிகளை தருகிறது. அவர்கள் தான் எஸ்.ஆர்.எச் என்ற பெயர் பிரபலமடைய முக்கிய காரணமானவர்கள். ரசிகர்கள் மிகவும் முக்கியமானவர்கள். போட்டியை பார்க்கும் சிறுவர்கள், சச்சின், கோலி, வார்னர், வில்லியம்சன் போன்று ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நாங்கள் அந்த அணியில் இல்லையென்று தெரிந்தால் மிகவும் ஏமாற்றமடைவார்கள். அதுதான் என்னை காயமாக்குகிறது என வார்னர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 7, 2022, 19:51 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
David Warner opens up on Issues with SRH team in IPL, points out what 'hurt' him most!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X