For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேவிட் வார்னர் இவ்வளவு நல்லவரா??.. அணியின் நலனுக்காக செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி - வீடியோ!

மும்பை: டெல்லி அணியின் நலனுக்காக டேவிட் வார்னர் செய்த ஒரு தியாகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி.

ரோகித் சர்மாவின் பிடிவாதம்.. தள்ளிப்போகும் சச்சினின் நீண்ட நாள் ஆசை.. மும்பை அணியில் திடீர் குழப்பம்ரோகித் சர்மாவின் பிடிவாதம்.. தள்ளிப்போகும் சச்சினின் நீண்ட நாள் ஆசை.. மும்பை அணியில் திடீர் குழப்பம்

டெல்லியின் வெற்றி

டெல்லியின் வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மேலும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்தும் வெளியேறியது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றியை விட, டேவிட் வார்னர் செய்த விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. டெல்லி அணியில் வழக்கமாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்குவார்கள். அதுவும் பிரித்வி ஷா ஸ்ட்ரைக்கராக இருப்பார். ஆனால் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டதால் நேற்று சர்ஃபராஸ் கான் ஓப்பனிங் களமிறக்கப்பட்டார்.

பவுலிங்கில் மாற்றம்

பவுலிங்கில் மாற்றம்

சர்ஃப்ராஸ் கான் நிற்பதை கண்ட பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் வழக்கத்திற்கு மாறாக வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான லிவிங்ஸ்டனை முதல் ஓவர் வீசுவதற்கு அழைத்தார். அதை கவனித்த டேவிட் வார்னர் அயல்நாட்டு சுழல்பந்து வீச்சாளரிடம் சஃப்ராஸ் கான் விக்கெட்டாகிவிடுவார் என்பதால் அவரிடம் பேசி நான் ஸ்ட்ரைக்கரில் நிற்கவைத்து விட்டு முதல் பந்தை தைரியமாக எதிர் கொண்டார்.

வார்னரின் தியாகம்

அணிக்கு சீக்கிரமாக விக்கெட் வந்துவிடக்கூடாது என சாதூர்யமாக யோசித்த வார்னருக்கு சோகம் தான் மிஞ்சியது. லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே டேவிட் வார்னர் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சர்ஃப்ராஸ் கானுக்காக தனது விக்கெட்டை பறிகொடுத்த வார்னரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Tuesday, May 17, 2022, 22:26 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022: David Warner's last-minute strike change goes wrong, fans impressed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X