For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2022: டெல்லிக்கு தாவும் மும்பையின் முக்கிய வீரர்.. 3 அதிரடி வீரர்களை டார்கெட் செய்த பாண்டிங்!

சென்னை: டெல்லி அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் ஓப்பனிங் இடத்திற்கு 3 வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இளம் படையுடன் வெற்றிகளை குவித்து வரும் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அந்த அணியின் வெற்றி சதவீதம் ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் முதல் பூட்டான் வீரர்.. தோனி கூறிய ஸ்பெஷல் அட்வைஸ்.. சிஎஸ்கே தட்டித்தூக்க ரெடி! ஐபிஎல் தொடரில் முதல் பூட்டான் வீரர்.. தோனி கூறிய ஸ்பெஷல் அட்வைஸ்.. சிஎஸ்கே தட்டித்தூக்க ரெடி!

டெல்லி அணி

டெல்லி அணி

2012ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 2019ல் ப்ளே ஆஃப் வரை முன்னேற்றியது. அதன்பின்னர் 2020ம் ஆண்டில் முதல் முறையாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. 2021ல் மீண்டும் ப்ளே ஆஃப் சுற்று வரை சென்று வெளியேறியது. இந்த அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது ஓப்பனிங் தான். ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் அணியின் தூணாக இருந்தனர். ஆனால் இந்தாண்டு தவானை கழட்டிவிட்டுள்ளது டெல்லி அணி. எனவே அந்த இடத்தை நிரப்புவதுதான் மெகா ஏலத்தில் முதல் பணியாக வைத்துள்ளது.

மும்பை வீரர்

மும்பை வீரர்

கடந்த 2018ம் ஆண்டு முதல் மும்பை அணியின் அதிரடி ஓப்பனராக இருந்து வருபவர் இஷான் கிஷான். ஆனால் அங்கு சரிவர வாய்ப்பு கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். முதல் பந்து முதலே அடித்து ஆடக்கூடிய திறமையுள்ள இவரை ப்ரித்வி ஷாவுடன் களமிறக்கினால் பவர் ப்ளே ஓவர்களில் ரன் ரேட் மலமலவென உயரும். இதுமட்டுமல்லாமல் டெல்லி அணிக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு துடிப்பான ஓப்பனர் கிடைத்துவிடுவார்.

வார்னர்

வார்னர்

டேவிட் வார்னர் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக தான் விளையாடினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பினால் இளம் வீரர்களுக்கு ப்ளே ஆஃப் சுற்றுகளை கடக்க பெரும் உதவியாக இருக்கும். ஒருபுறம் ப்ரித்வி ஷா அதிரடி காட்ட, டேவிட் வார்னரால் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியும். எனினும் அவர் கேப்டனாக தான் வருவேன் என்ற முடிவெடுத்தால், டெல்லி அவரை புறக்கணித்துவிடும்.

தவான்

தவான்

4 வீரர்களை தான் தக்கவைக்க முடியும் என்பதால், வயதாகிவிட்டது என தவானை டெல்லி அணி கழட்டிவிட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க தொடர் மூலம் தனது வயது பிரச்சினையே இல்லை என தவான் நிரூபித்துவிட்டார். டெல்லி அணிக்காக கடந்த 2020ல் 618 ரன்கள், 2021ல் 587 ரன்கள் என தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். எனவே அவரை மீண்டும் வாங்கவும் டெல்லி அணி முயற்சிக்கும் எனத்தெரிகிறது.

Story first published: Saturday, January 29, 2022, 17:40 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Delhi capitals Targets the 3 Star players in IPL 2022 Mega auction for Opening position with prithvi shaw
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X