விடுவிக்கப்பட்ட வீரர்கள் அடங்கிய கனவு ஐ.பி.எல். அணி..!! இப்படி இருந்தா எப்படி இருக்கும்??

ஐ.பி.எல். தொடரில் தற்போது 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களை அறிவித்துள்ளது.

இதில் சில அணிகள் பல முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது. இந்த வீரர்களையா வெளியேற்றிவிட்டார்கள் என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அமைந்துள்ளது.

தற்போது வெளியேற்றப்பட்ட வீரர்களை வைத்து ஒரு அணி உருவாக்கினால் அது எப்படி இருக்கும் என்பதை தற்போது காணலாம்..

விடுவிக்கப்பட்ட வீரர்களில் மிகவும் முதன்மையானவர் டேவிட் வார்னர், அவர் அணியின் கேப்டனாகவும், தொடக்க வீரராகவும் கனவு அணியில் இருப்பார். அவருக்கு ஜோடியாக இந்திய வீரர் கே.எல். ராகுல் செயல்படுவார். மூன்றாவது வீரராக ராஜஸ்தான் அணி விடுவித்த பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிப்பார். நான்காவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் கனவு அணியில் இடம்பெறுவார்.

பேட்டிங் வரிசையில் 5வது வீரராக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கனவு அணியில் இடம்பிடிப்பார். ஆறாவது வீரராக அதிரடி வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். 7வது வீரராக பஞ்சாப் அணி விடுவித்த ஷாரூக்கான் உள்ளார்.

8வது வீரராக ஐதராபார் அணி விடுவித்த ரஷித் கானும், 9வது வீரராக இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹலும் உள்ளனர். 10வது வீரராக கடந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் பட்டேலும், 11வது வீரராக டிரெண்ட் பவுல்டும் இருப்பார். 12வது வீரராக சென்னை அணி விடுவித்த டுபிளஸிஸ் இருப்பார்.

இப்படி பட்ட வீரர்களை புதிய அணிகளான அகமதாபாத்தோ அல்லது லக்னோ அணிகளோ தேர்வு செய்தால் அந்த அணி ஐ.பி.எல். தொடரில் கில்லி போல் செயல்படும்.. ஆனால், இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இது கனவு அணியாகவே இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 Team Which Released the Players Picked For a Dream Team. Warner Will be Leading the Dream Team
Story first published: Wednesday, December 1, 2021, 19:40 [IST]
Other articles published on Dec 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X