For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பியை காலி செய்த அண்ணன்.. மகாபாரதம் போல் மாறிய ஐபிஎல் தொடர்..ருசிகர சம்பவம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 4வது லீக் ஆட்டத்தில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மகளிர் உலகக் கோப்பை-114 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த இந்தியா.. அதுக்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?மகளிர் உலகக் கோப்பை-114 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த இந்தியா.. அதுக்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?

லக்னோ அணியில் தீபக் ஹூடா மற்றும் பதோனி அரைசதம் விளாசி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

ரன்குவிப்பு

ரன்குவிப்பு

இந்த இலக்கை துரத்திய குஜராத் அணியும் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு ஹர்திக் பாண்டியா வந்தார். வழக்கம் போல் ஹர்திக் பவுண்டரி, சிக்சர் என விளாச, லக்னோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கேஎல் ராகுல், ஹர்திக்கின் மூத்த சகோதரரான குர்னல் பாண்டியாவை பந்துவீச அழைத்தார்.

முதல்முறை

முதல்முறை

பிறந்ததில் இருந்து ஒரே அணிக்காக விளையாடி வரும் அண்ணன், கம்பியான ஹர்திக், குர்னல் பாண்டியா, ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காகவே விளையாடி வந்தனர். ஆனால் இம்முறை காலம் மாறி மகாபாரதத்தில் வருவது போல் இருவரும் எதிர் எதிர் அணிக்கு விளையாடினர்.

விக்கெட்

விக்கெட்

கவுண்டமணியை பார்த்து செந்தில் பம்முவது போல் அண்ணன் குர்னலை பார்த்து ஹர்திக் பம்ம தொடங்கினார். ரன்கள் அடிக்க வேகமும் குறைந்தது. ஒரு கட்டத்தில் பாண்டியா 33 ரன்கள் எடுத்திருந்த போது குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தம்பியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அது குறித்து கண்டுகொள்ளாமல் குர்னல் அமைதி காத்தார்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

தம்பியின் விக்கெட்டை அண்ணன் வீழ்த்திய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் உள்ள குர்னல் பாண்டியா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். குர்னல் பாண்டியாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க முற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை லக்னோ தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 28, 2022, 23:21 [IST]
Other articles published on Mar 28, 2022
English summary
IPL 2022 – Elder Brother Krunal Pandya takes young brother hardik wicket தம்பியை காலி செய்த அண்ணன்.. மகாபாரதம் போல் மாறிய ஐபிஎல் தொடர்..ருசிகர சம்பவம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X