For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இது வேற இருக்கே” முதலில் பேட் செய்தால்தான் வெற்றியா? வெளியான ஐபிஎல் இறுதிப்போட்டி பிட்ச் ரிப்போர்ட்

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் இறுதிப்போடி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயலஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2022 இறுதி போட்டி - ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை.. யாருக்கு வெற்றி வாய்ப்பு..பிளேயிங் லெவன்ஐபிஎல் 2022 இறுதி போட்டி - ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை.. யாருக்கு வெற்றி வாய்ப்பு..பிளேயிங் லெவன்

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

ஒருபுறம் அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு வந்த குஜராத் அணி, மற்றொரு புறம் 14 ஆண்டுகள் கழித்து கோப்பை வெல்ல காத்திருக்கும் ராஜஸ்தான் அணி என பெரிய எதிர்பார்ப்புகளுடன் போட்டி நடைபெறுகிறது. இதுவரை இல்லாத அளவாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போட்டிக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

அந்தவகையில் பிட்ச் தரமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது மோதிரா மைதானத்தில் முன்பெல்லாம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகள் தான் இருந்தன. தற்போது பிட்ச் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் தூரமாக இருந்தாலும், களம் வரண்டு இருப்பதால், பேட்டில் பட்டவுடன் பந்து பவுண்டரிக்கு சென்றுவிடும். முதல் இன்னிங்ஸில் பவுலர்களுக்கு சாதகமாக இருப்பதால் பிட்ச்-ல் பந்தின் திசையை கணிப்பது கடினமாக இருப்பதாக தெரிகிறது. எனினும் பேட்ஸ்மேன் முதல் சில பந்துகள் நிதானமாக கவனித்து ஆடினால் பின்னர் அதிரடி காட்டலாம்.

பவுலர்களின் நிலை

பவுலர்களின் நிலை

பவுலிங்கை பொறுத்தவரையில் முதல் இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் ஜொலிக்கலாம். 2வது இன்னிங்ஸில் சற்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் பந்தில் வேரியேஷங்களை காட்ட முடிவதில்லை எனக்கூறுகின்றனர். எனவே இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது தான் சரியான முடிவாக இருக்கும்.

 வெற்றிக்கான ரன் என்ன?

வெற்றிக்கான ரன் என்ன?

இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 180+ ரன்கள் அடித்தால் பிரகாசமான வெற்றி வாய்ப்புடன் இருக்கலாம் எனத்தெரிகிறது. ஒருவேளை 160க்கு குறைவாக ரன்களை அடித்துவிட்டால் எதிரணியை சமாளிப்பது கடினமாக இருக்கும். ராஜஸ்தான் vs ஆர்சிபி போட்டியிலேயே இதனை பார்த்திருப்போம்.

Story first published: Sunday, May 29, 2022, 9:09 [IST]
Other articles published on May 29, 2022
English summary
GT vs RR IPL Final match Ahmedabad Pitch Report ( ஐபிஎல் இறுதிப்போட்டி பிட்ச் ரிப்போர்ட் ) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான அகமதாபாத் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X