For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வேற வழி தெரியல”..பிசிசிஐ-க்கு சுரேஷ் ரெய்னா வைத்த முக்கிய கோரிக்கை.. ஐபிஎல்-ல் தேர்வாகாத விரக்தி!

மும்பை: ஐபிஎல் தொடரில் ஏலம் போகதது குறித்து சுரேஷ் ரெய்னா பிசிசிஐ-க்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.

"மிஸ்டர் ஐபிஎல்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.

4 முறை சாம்பியனான சென்னை அணியின் வெற்றிகளுக்கு மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார். ஆனால் சிஎஸ்கே அணியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால், இந்தாண்டு மெகா ஏலத்தில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

மீண்டும் ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிஎஸ்கே மீது திரும்பும் பார்வை.. விசாரணையை தொடங்கிய சிபிஐ - விவரம் மீண்டும் ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிஎஸ்கே மீது திரும்பும் பார்வை.. விசாரணையை தொடங்கிய சிபிஐ - விவரம்

ரெய்னா வேதனை

ரெய்னா வேதனை

கடந்த சீசனில் ரெய்னாவின் ஃபார்ம் காரணமாக இந்தாண்டு அடிப்படை தொகையான ரூ.2 கோடி கொடுத்து கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர், ஐபிஎல் தொடரின் இந்தி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு மன வருத்தமாக இருந்தது.

ரெய்னாவின் கோரிக்கை

ரெய்னாவின் கோரிக்கை

இந்நிலையில் பிசிசிஐயிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை ரெய்னா வைத்துள்ளார். அதில், பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களுக்கு, ஐபிஎல்-லும் வாங்கப்படாவிட்டால் வேறு வருமானம் இல்லை. எனவே இதற்கு பிசிசிஐ ஒரு திட்டம் வகுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்களை அயல்நாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

என்ன பலன் இருக்கும்

என்ன பலன் இருக்கும்

அதாவது பிசிசிஐ-உடன் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள், அயல்நாட்டு தொடர்களில் விளையாடினால் நிறைய கற்றுக்கொள்வார்கள். குறைந்தது 2 அயல்நாட்டு தொடர்களிலாவது விளையாட அனுமதிக்க வேண்டும். கரீபியன் ப்ரீமியர் லீக் மற்றும் பிக் பேஷ் தொடர்கள் நல்ல அனுபவத்தை கொடுக்கக்கூடியவை.

வேறு வழியே இல்லை

வேறு வழியே இல்லை

அயல்நாட்டு அணிகளில் ஃபார்ம் அவுட்டான வீரர்கள் பலர், ஐபிஎல் தொடரில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு திரும்புகின்றனர். எனவே அதே போன்று இந்திய வீரர்களும் தயாராவதற்கு பிசிசிஐ முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு வேறு வழியே இல்லை எனத்தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ விதிமுறைகளின் படி எந்தவொரு இந்திய வீரரும் அயல்நாட்டு தொடர்களில் விளையாடக்கூடாது என்ற தடை நீண்ட நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 14, 2022, 19:06 [IST]
Other articles published on May 14, 2022
English summary
IPL 2022: Former CSK Player Suresh Raina Special Request to the BCCI after unsold in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X