For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் மற்ற அணிகளுக்கு எடுத்துக்காட்டு.. அணிக்காக என்னையே தியாகம் செய்வேன்.. ஹர்திக் மாஸ் பேச்சு

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 15வது சீசன் சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று அசத்தியது, முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற 2வது அணி என்ற பெருமையை குஜராத் பெற்றது.

Recommended Video

IPL 2022 Hardik Pandya குட்டி ஸ்டோரி | Gujarat Titans | Champions | #Cricket

கோப்பையை வென்றதும் குஜராத் அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அவரது பயிற்சியாளரே இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும் முடிவு என்று கூறி இருந்தார்.

ஐபிஎல் இறுதி போட்டி - குஜராத் வெற்றி வாய்ப்புக்கு 4 காரணம்.. விதியை மாற்ற கூடிய வீரர்கள் பட்டியல்ஐபிஎல் இறுதி போட்டி - குஜராத் வெற்றி வாய்ப்புக்கு 4 காரணம்.. விதியை மாற்ற கூடிய வீரர்கள் பட்டியல்

ஆனால் , ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் தன்னை நிரூபித்துவிட்டார்.

வெற்றிக்கான காரணம்

வெற்றிக்கான காரணம்

கோப்பை வழங்கும் விழாவில் பேசிய ஹர்திக் பாண்டியா, வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. இதை சேர்த்து மொத்தம் 5 முறை ஐபிஎல் கோப்பையை வீரராக வென்று இருக்கிறேன். அதற்கு அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு அணியாக விளையாடினால் வெற்றி நிச்சயம் என்பதை மற்ற அணிகளுக்கு எடுத்துக் காட்டாக எங்கள் வெற்றி இருக்கும்.

சிறந்து பந்துவீச்சாளர்கள்

சிறந்து பந்துவீச்சாளர்கள்

நல்ல அணியை கட்டமைத்து, நல்ல மனிதர்கள் எங்களை சூழ இருந்ததால் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது. நான் யோசிக்கும் விதமும், பயிற்சியாளர் நெஹ்ரா யோசிக்கும் விதமும் ஒன்றாகவே இருந்தது. எங்கள் அணியின் சூழலும் சிறப்பாக இருந்தது. நாங்கள் திறமையான பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டும் என்று எண்ணினோம். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனுடைய போட்டியாக இருக்கலாம்.

தவறுகளை திருத்தி கொள்வோம்

தவறுகளை திருத்தி கொள்வோம்

ஆனால் உங்களுக்கு பந்துவீச்சாளர்கள் தான் போட்டியை வென்று தருவார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற பிறகும், என்ன தவறு செய்தோம், அதனை எப்படி திருத்தி கொண்டு முன்னேறுவது என்பதை பற்றி பேசுவோம். அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்கள். எங்கள் அணியை மகத்தான அணியாகவும், பல வெற்றிகளை பெற்ற அணியாக உருவாக்க வேண்டும் என்று எண்ணினோம்.

டி20 உலகக் கோப்பை கனவு

டி20 உலகக் கோப்பை கனவு

பல தலைமுறைகள் வந்த பிறகும், நாங்கள் முதல் தொடரிலேயே கோப்பையை வென்றது குறித்து பேசுவார்கள். அணியின் வெற்றிக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னுடைய உண்மையான குறிக்கோள், டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று தர காரணமாக இருக்க வேண்டும் என்பதே. அதற்கான பயணம் தொடரும்.

Story first published: Monday, May 30, 2022, 11:38 [IST]
Other articles published on May 30, 2022
English summary
IPL 2022 – Gujarat captain Hardik Pandya speech about Team success உலகின் மற்ற அணிகளுக்கு எடுத்துக்காட்டு.. அணிக்காக என்னையே தியாகம் செய்வேன்.. ஹர்திக் மாஸ் பேச்சு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X