For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL: ரெய்னாவுக்கு அவமானம்.. ஆஃப்கான் வீரரை தேர்வு செய்த குஜராத் அணி.. அப்படி என்ன அவரிடம் உள்ளது?

மும்பை: குஜராத் டைட்டான்ஸ் அணியின் ஓப்பனிங் வீரராக ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அனைத்து அணிகளும், பயிற்சி முகாம்கள், ப்ளேயிங் 11 தேர்வு என இறுதிகட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

“எல்லாம் ஓரளவுக்கு தான்..” பிசிசிஐ-ன் சுயநலமான செயல்.. நஷ்டத்தால் போர்க்கொடி தூக்கிய ஐபிஎல் அணிகள்! “எல்லாம் ஓரளவுக்கு தான்..” பிசிசிஐ-ன் சுயநலமான செயல்.. நஷ்டத்தால் போர்க்கொடி தூக்கிய ஐபிஎல் அணிகள்!

ராயின் விலகல்

ராயின் விலகல்

இதில் குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு தான் பெரும் பின்னடைவாக சென்றது. மெகா ஏலத்தின் போது இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்-ஐ மிகக்குறைந்த விலையாக ரூ.2 கோடிக்கு வாங்கியிருந்தது. மேலும் ஓப்பனிங்கிற்கும் அவரை தான் தேர்வு செய்து வைத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். பயோ பபுளில் இருக்க விருப்பமில்லை எனக்கூறி விளக்கமளித்திருந்தார்.

 ரெய்னாவுடன் பேச்சுவார்த்தை?

ரெய்னாவுடன் பேச்சுவார்த்தை?

இதனையடுத்து ஜேசன் ராய்-ன் இடத்திற்கு சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை நியமிக்க குஜராத் அணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. சுரேஷ் ரெய்னா விளையாடினால் குஜராத் அணிக்கு ஆதரவு தருவதாக கூறி சமூகவலைதளங்களில் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

ஆப்பு வைத்த குஜராத்

ஆப்பு வைத்த குஜராத்

இந்நிலையில் அதற்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜேசன் ராய்-ன் இடத்திற்கு ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் என்ற இளம் வீரர் களமிறக்கப்பட்டுள்ளார். 20 வயது மட்டுமே ஆகும் குர்பாஸ், ஓப்பனிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். மேலும் பார்ட் டைமாக பந்துவீச்சிலும் ஈடுபடுவார். இது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாகும்.

Recommended Video

IPL 2022: Faf Du Plessis to be Royal Challengers Bangalore’s New Captain? | Oneindia Tamil
அசரவைக்கும் ரெக்கார்ட்

அசரவைக்கும் ரெக்கார்ட்

கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலில் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய குர்பாஸ், இதுவரை 20 டி20 போட்டிகளில் விளையாடி 534 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இவர் ஸ்பெஷலிஸ்ட் ஆவார். இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 428 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்களும் அடங்கும். ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை குர்பாஸ் பெற்றார். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு தொடர்களில் இவரின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 8, 2022, 15:54 [IST]
Other articles published on Mar 8, 2022
English summary
Rahmanullah Gurbaz signed as the replacement of Jason Roy in Gujarat Titans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X