For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்- லக்னோ Vs குஜராத்.. இன்னக்கி சம்பவம் இருக்கு.. டாஸ் – ஆடுகளம் எப்படி இருக்கு..?

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 4வது லீக் ஆட்டத்தில் புதியதாக களமிறங்கும் 2 அணிகளான லக்னோ மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புதிய அணிகள் என்பதால் இவ்விரு அணிகளும் கத்துக்குட்டியாக இருக்குமா அல்லது பாயும் புலியாக இருக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

ஒவ்வொரு சீசனிலும் எதாவது ஒரு அணி அடிமையாக மற்ற அணிக்கு சிக்கிவிடும். அதாவது அந்த அணியை போட்டு மற்ற அணிகள் கும்மி எடுக்கும்.

புதிய பாதை

புதிய பாதை

இந்த சீசனில் எந்த அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று தெரியவில்லை. இதனால் லக்னோ மற்றும் குஜராத் இரண்டுமே புதிய அணிகள் , புதிய வீரர்கள், புதிய நிர்வாகம் என்பதால் ஐபிஎல் போட்டியின் சூழலுக்கு தங்களை மாற்றி கொள்ள சிறிது காலம் இந்த புதிய அணிகளுக்கு பிடிக்கலாம். எனினும் குஜராத் மற்றும் லக்னோ அணியில் திறமையான வாய்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக உள்ளனர்.

பின்னடைவு

பின்னடைவு

லக்னோ அணியில் கேஎல்ராகுல், குயின்டன் டி காக், மணிஷ் பாண்டே, ஆவேஷ் கான் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், ஹோல்டர், மெயர்ஸ், ஸ்டோனிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் முதல் சில போட்டியில் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று குஜராத் அணியிலும் ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், ரஷித் கான், மேத்தீவ் வெட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ்

டாஸ்

வான்கடே மைதானம் முதல் போட்டியில் ஈரப்பதமாக காணப்பட்டது. எனினும் இன்றைய ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இரவு நேரத்தில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் , டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ஹவ செய்தார். லக்னோ அணியில் வெளிநாட்டு வீரர்களாக குயின்டன் டி காக், லீவிஸ் மற்றும் சமீரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேத்தீவ் வெட், டேவிட் மல்லர், ரஷித் கான், லுகி பெகுர்சன் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ளனர்

ஜாலியாக விளையாடுங்க

ஜாலியாக விளையாடுங்க

புதிய அணி என்பதால் ஜாலியாக விளையாடுங்க என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். இதே போன்று பேசிய கேஎல் ராகுல், புதிய அணி, புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறோம். வெற்றியுடன் தொடங்குவோம் என நம்புகிறோம். புதிய சகாப்தத்தை படைக்கும் பொறுப்பு உள்ளது. களத்தில் இறங்க மிகவும் ஆவலுடன் உள்ளோம்.

Story first published: Monday, March 28, 2022, 19:18 [IST]
Other articles published on Mar 28, 2022
English summary
IPL 2022 – Gujarat won the toss and choose to bowl ஐபிஎல்- லக்னோ Vs குஜராத்.. இன்னக்கி சம்பவம் இருக்கு.. டாஸ் – ஆடுகளம் எப்படி இருக்கு..?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X