For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவே குஜராத் அணிக்கு சிக்கலாக அமைந்துவிட்டார்.

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி பொளந்துக்கட்டியது.

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் சொதப்பல்

ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு ஏமாற்றினார். எனினும் முதல் விக்கெட்டிற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை தூக்கி நிறுத்தினார். 26 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த பட்லர் நிதானமாக ஆடி வந்தார். இதனால் 11 / 1 என இருந்த ஸ்கோர் 79/2 என மாறியது.

பட்லர் காட்டிய அதிரடி

பட்லர் காட்டிய அதிரடி

சஞ்சு சாம்சன் சென்ற பிறகு விக்கெட்கள் மலமலவென சரிந்த போதும், அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் நிதானமாக தான் ஆடி வந்தார். 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அதன் பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். 56 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்தார். இதனால் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 188 ரன்களை குவித்தது.

Recommended Video

IPL 2022 முதல் அணியாக Final சென்ற Gujarat Titans | #Cricket
பட்லரின் அதிர்ஷ்டம்

பட்லரின் அதிர்ஷ்டம்

பட்லர் இந்த அளவிற்கு ரன் குவிக்க ஹர்திக் பாண்ட்யா தான் காரணம். ஆட்டத்தின் 17வது ஓவரை யாஷ் தயால் வீச, அதில் ஆவுட்சைட் ஆஃப் திசையில் வந்த பந்தை லாங் ஆன் திசையில் பட்லர் தூக்கி அடித்தார். ஆனால் அங்கு தான் ஹர்திக் பாண்ட்யா நின்றிருந்தார். அழகாக வந்த கேட்ச்-ஐ அவர் பிடிக்க முன் நகர்ந்து ஓடி வந்தார். ஆனால் பந்து அவர் கையில் கூட படவில்லை.

கீழே விழுந்த பாண்ட்யா

ஓடி வந்த போது, புற்கள் ஈரப்பதமாக இருந்ததால், சறுக்கி திடீரென கீழே விழுந்தார். இதனால் பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றுவிட்டது. முதுகு பகுதியில் நல்ல காயம் ஏற்பட்டதாக தெரிந்த போதும், அவர் அதிர்ஷ்டவசமாக எழுந்து சென்றார். அவருக்கு எந்தவித காயமும் இல்லை என தெரியவந்தது. அந்த கேட்ச்-ன் போது பட்லரின் ஸ்கோர் 43 ரன்கள் மட்டுமே. ஹர்திக்கின் சறுக்கல் பட்லரை 89 ரன்களை வரை கொண்டு சென்றுவிட்டது. இதுவே குஜராத் அணிக்கும் கடின இலக்கு வருவதற்கான காரணமாகும்.

Story first published: Tuesday, May 24, 2022, 22:37 [IST]
Other articles published on May 24, 2022
English summary
Hardik pandya Slips in GT vs RR match ( குஜராத் vs ராஜஸ்தான் போட்டியில் சறுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா ) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் பட்லரின் கேட்ச்-ஐ பிடிக்க முயன்ற போது, ஹர்திக் பாண்ட்யா வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X