For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி

அகமதாபாத்: ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற விதி இலங்கை வீரர் ஒருவரின் கையில் தான் இருக்கிறது எனத்தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெறும் 2வது குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றனர்.

பண்ட்-ஐ மிஞ்சிய க்ருணால் பாண்ட்யா.. அம்பயரிடம் கடும் வாக்குவாதம்.. ஆர்சிபி ஆட்டத்தில் கவனிச்சீங்களா! பண்ட்-ஐ மிஞ்சிய க்ருணால் பாண்ட்யா.. அம்பயரிடம் கடும் வாக்குவாதம்.. ஆர்சிபி ஆட்டத்தில் கவனிச்சீங்களா!

ராஜஸ்தான் அணி தீவிரம்

ராஜஸ்தான் அணி தீவிரம்

புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்த ராஜஸ்தான் அணி முதல் குவாலிஃபையரில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. அந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்ல இன்று கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இதே போல முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்சிபி அணியின் படு தீவிரமாக உள்ளது. இதற்காக ஆர்சிபி ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

 ஆர்சிபிக்கு இருக்கும் அதிர்ஷ்டம்

ஆர்சிபிக்கு இருக்கும் அதிர்ஷ்டம்

இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றியை தீர்மானிப்பது இலங்கை வீரர் ஹசரங்காவின் கையில் தான் உள்ளது. நடப்பு தொடரில் ராஜஸ்தானின் அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருப்பது ஜாஸ் பட்லர் தான். எனினும் அணியின் தூணாக இருப்பது சஞ்சு சாம்சன் தான். பட்லர் ஓப்பனிங்கில் ரன் குவித்தாலும், மிடில் ஆர்டரில் இருந்து இக்கட்டான சூழலிலும் அணியின் ஸ்கோரை வெற்றிகான இலக்கை நோக்கி கொண்டு செல்வது அவர் தான். தற்போது வரை 14 போட்டிகளில் 375 ரன்களை குவித்துள்ளார்.

 சஞ்சு சாம்சனுடைய பலம்

சஞ்சு சாம்சனுடைய பலம்

மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் அதிக ரன் குவிக்கிறார் என்பதற்கு காரணம் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் பலமாக உள்ளது தான். நடப்பு தொடரில் இதுவரை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 107 பந்துகளை சந்தித்துள்ள சாம்சன் 178 ரன்களை விளாசியுள்ளார். 5 முறை மட்டுமே அவுட்டாகியுள்ளார். ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் ஸ்டரைக் ரேட் 166.35 ஆக உள்ளது.

 ஒருவரிடம் மட்டும் திணறல்

ஒருவரிடம் மட்டும் திணறல்

ஆனால் ஒருவரிடம் மட்டும் அவரின் பாட்ஷா பழிக்காது. ஆர்சிபி வீரர் ஹசரங்கா தான் அவர். டி20 கிரிக்கெட்டில் ஹசரங்காவுக்கு எதிராக 23 பந்துகளை சந்தித்துள்ள சஞ்சு சாம்சன் 5 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 18 ரன்களை மட்டுமே சஞ்சுவால் குவிக்க முடிந்தது. எனவே இன்று ஹசரங்கா vs சஞ்சு சாம்சன் இடையேயான போட்டி தான் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளது.

Story first published: Friday, May 27, 2022, 16:56 [IST]
Other articles published on May 27, 2022
English summary
Hasaranga vs Sanju samson battle in RCB vs RR match ( ஆர்சிபி vs ராஜஸ்தான் போட்டியில் ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் ஆர்சிபியின் வெற்றியை தீர்மானிப்பது இலங்கை வீரர் ஒருவரின் கையில் தான் உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X