For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெய்னாவின் ஐபிஎல் கம்பேக்.. சிக்கலில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா.. அதிரடி முடிவெடுக்க துணியும் குஜராத்

மும்பை: சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடருக்குள் கம்பேக் கொடுப்பதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Suresh Raina enter Gujarat Titans for IPL 2022 ? | Oneindia Tamil

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்பை வான்கடேவில் நடைபெற்று வருகிறது.

இப்படிபட்ட சூழலில் தான் புதிதாக வந்துள்ள குஜராத் டைட்டான்ஸ் அணியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

ஐபிஎல்-ல் மீண்டும் எண்ட்ரி தரும் சுரேஷ் ரெய்னா.. இனி ஆட்டம் தூள் தான்.. முன்னணி அணிக்கு அடித்த லக்!!ஐபிஎல்-ல் மீண்டும் எண்ட்ரி தரும் சுரேஷ் ரெய்னா.. இனி ஆட்டம் தூள் தான்.. முன்னணி அணிக்கு அடித்த லக்!!

ஜேசன் ராய் விலகல்

ஜேசன் ராய் விலகல்

இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய்-ஐ ரூ. 2 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்திருந்தது. தொடக்க வீரராகவும் களமிறக்க திட்டமிட்டது. ஆனால் நேற்று திடீரென ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாகவும், பயோ பபுள் சூழலில் 2 மாதங்கள் இருக்க முடியாது எனவும் அறிவித்தார். இதனால் அவருக்கு மாற்று வீரரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

அதன்படி முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாஹாவை ஓப்பனிங் களமிறக்கிவிட்டு, ரெய்னாவை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கினால் சிறப்பான டாப் ஆர்டர் அமையும். இதே போல கூடுதலாக பவுலிங் ஒரு வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாண்ட்யாவுக்கு தலைவலி

பாண்ட்யாவுக்கு தலைவலி

இந்நிலையில் இதில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் பெரும் தலைவலியாக போகும். ஏனென்றால் ரெய்னா வந்தால், அணியின் சீனியர் வீரராக அவர் தான் இருப்பார். ஒருவேளை முதல் ஓரிரு போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியில் சொதப்பினால் நேராக கேப்டன் பதவியை ரெய்னாவிடம் கொடுத்துவிடுவார்கள். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஏனென்றால் இதுவரை பாண்ட்யா கேப்டன்சியே செய்தது கிடையாது.

குஜராத்துடனான உறவு

குஜராத்துடனான உறவு

பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அணியின் விளம்பரம் பெரியளவில் ரசிகர்களிடம் சென்றடையும். இதுதான் அவரை கேப்டனாக நியமிக்க முக்கிய காரணம். ஆனால் சுரேஷ் ரெய்னாவும் குஜராத் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். ஏற்கனவே குஜராத் லையன்ஸ் அணியை ரெய்னா தான் 2 ஆண்டுகள் வழிநடத்தியுள்ளார். இதனால் அவருக்கும் நற்பெயர் உள்ளது.

ஐபிஎல் வியூகம் அறிந்தவர்

ஐபிஎல் வியூகம் அறிந்தவர்

இதுமட்டுமல்லாமல், ஐபிஎல்-ன் கிரிக்கெட்டின் அனைத்தும் வியூகங்களும் ரெய்னாவுக்கு தெரியும். குறிப்பாக எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா ஆகிய முன்னணி கேப்டன்கள் என்ன செய்வார்கள் என்பது சுரேஷ் ரெய்னாவுக்கு நன்கு தெரியும். இதனால் அவரை கேப்டனாக நியமிக்க குஜராத் அணி சற்றும் யோசிக்காது.

Story first published: Wednesday, March 2, 2022, 14:48 [IST]
Other articles published on Mar 2, 2022
English summary
If Suresh raina joins in gujarat titans, Hardik pandya possibly get into the trouble on IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X