For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி அணி கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. மெகா ஏலத்திற்காக போட்ட ப்ளான்.. சீனியர் உடைத்த உண்மை!

சென்னை: ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வரும் பிப்ரவரி மாதத்தின் 12 மற்றும் 13ம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.

ஒவ்வொரு அணியும் தங்களது முக்கிய வீரர்களை கழட்டிவிட்டதால், ஏலத்தின் போது என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

புஜாரா, ரஹானேவுக்கு ஊதியம் குறைகிறது..!! ராகுல், ரிஷப் காட்டில் மழை.. பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்தம்..புஜாரா, ரஹானேவுக்கு ஊதியம் குறைகிறது..!! ராகுல், ரிஷப் காட்டில் மழை.. பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்தம்..

ஆர்சிபி திட்டம்

ஆர்சிபி திட்டம்

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஒரு கோப்பையையும் வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணி இந்தாண்டு அதிக கவனத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால் அவரை விட சிறந்த கேப்டனை மெகா ஏலத்தில் வாங்க திட்டமிட்டு வருகிறது. அந்த அணி தற்போது விராட் கோலி ( ரூ.15 கோடி), மேக்ஸ்வெல் ( ரூ.11 கோடி), முகமது சிராஜ் ( ரூ.7 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரா?

ஸ்ரேயாஸ் ஐயரா?

டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆர்சிபி அணியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டது. ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ள ஸ்ரேயாஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் என சீனியர்கள் இருக்கும் அணியை எப்படி வழிநடத்துவார் என சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆர்சிபி கேப்டனாக இடம்பெற 2 வீரர்களுக்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

இதுகுறித்து பேசிய அவர், அணியில் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்படலாம். 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார், கோலியிடம் உரிமையாக வேலை வாங்குவது போன்றது வரை அவருக்கு சாதகமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் டி20 போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு நல்ல அனுபவம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2022 Best Retained Bowlers | OneIndia Tamil
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

ஒருவேளை மேக்ஸ்வெல் கேப்டனாக வேண்டாம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை ஆர்சிபி கேப்டனாக நியமிக்கலாம் எனக் கூறியுள்ளார். பெங்களூரு சின்னசாமி பிட்ச் மற்றும் ஆர்சிபிக்கு ஏற்ற வீரர் ஜேசன் ஹோல்டர். சீனியர் வீரரான அவரால் அந்த அணியை நிச்சயம் வழிநடத்த முடியும். வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் நிறைய போட்டிகளுக்கு கேப்டன்சி செய்த அனுபவம் உள்ளவர் ஹோல்டர். எனவே அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 26, 2022, 16:34 [IST]
Other articles published on Jan 26, 2022
English summary
The mega auction for the 2022 IPL series will take place on the 12th and 13th of February. Former player Akash Chopra has said that Jason holder is more likely to be the next captain of the RCB team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X