For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்

மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய மிக சுவாரஸ்ய போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது.

Recommended Video

KKR vs LSG கடைசி பந்து வரை பரபரப்பு Lucknow Qualify For Playoffs | #Cricket

66வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

ஒரு கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய அதிரடி சதம், சிக்ஸர் மழைகள், கடைசி ஓவர் பரபரப்பு, ட்விஸ்ட் என அனைத்தும் இதில் இருந்தது.

ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்

 டிக்காக் ருத்ரதாண்டவம்

டிக்காக் ருத்ரதாண்டவம்

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த லக்னோ அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 210 ரன்களை குவித்தது. ஓப்பனிங் வீரர்கள் குயிண்டன் டிக்காக் - கே.எல்.ராகுல் ஜோடி ஐபிஎல் தொடரின் 3வது பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக ஆடிய குயிண்டன் டிக்காக் 70 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 140 ரன்களை விளாசினார். கேப்டன் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். இதனால் 210 ரன்களை குவித்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்

கொல்கத்தா இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியும் கடும் சவால் கொடுத்தது. ஓப்பனிங் ஜோடி வெங்கடேஷ் ஐயர் டக் அவுட், அபிஜீத் தோமர் 4 ரன்களுக்கு வெளியேறிய போதும், கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் நிதிஷ் ராணா அணியை தூக்கி நிறுத்தினர். ஒருகட்டத்தில் ஸ்ரேயாஸ் 50 ரன்களுக்கும், நிதிஷ் ராணா 42 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் வந்த சாம் பில்லிங்ஸ் 36 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார்.

ரிங்கு சிங் ஆட்டம்

ரிங்கு சிங் ஆட்டம்

இதனால் அந்த அணி 150 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. கடைசி 20 பந்துகளில் 61 ரன்கள் தேவை. அப்போது அந்த ரிங்கு சிங் பெரும் ட்விஸ்ட் கொடுத்தார். 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசினார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சுனில் நரேன் 7 பந்துகளில் 21 ரன்களை அடித்துள்ளார்.

இறுதி ஓவர் பரபரப்பு

இறுதி ஓவர் பரபரப்பு

இந்த சூழலில் தான் ஆட்டம் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய இந்த ஓவரில் முதல் 3 பந்துகளை ரிங்கு சிங் 4, 6, 6 என 16 ரன்களை சேர்த்துவிட்டார். எனவே கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் அதிரடி ஃபார்மில் உள்ள 2 பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்பதால் கொல்கத்தாவின் பக்கம் வெற்றி சாய்ந்தது.

கடைசி ட்விஸ்ட்

கடைசி ட்விஸ்ட்

4வது பந்து 2 ரன்களை அடிக்க, 5வது பந்தில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. வைட் லைனில் போடப்பட்ட பந்தை ரிங்கு தூக்கி அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனது. இந்த கேட்ச்-ஆல் கடைசி ஒரே பந்தில் 3 ரன்கள் தேவை என ஆனது. களத்திற்கு புதிதாக வந்த உமேஷ் யாதவுக்கு சரியாக யார்க்கர் பந்தை வீசினார் ஸ்டோய்னிஸ். முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பதா, ரன் அடிப்பதா எனத் தெரியாமல் பேட்டை சுழற்றினார். ஆனால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

Story first published: Thursday, May 19, 2022, 10:26 [IST]
Other articles published on May 19, 2022
English summary
KKR vs LSG Match ( கொல்கத்தா vs லக்னோ போட்டி ) லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் முக்கிய ஆட்டமாக பதிவாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X