கேகேஆர் வெற்றியால் சிஎஸ்கேக்கு சிக்கல்.. சூடுபிடித்த ஐபிஎல் பிளே ஆப் பந்தயம்.. காலை வாரிய மும்பை

மும்பை: ஐபிஎல் தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

IPL 2022 Mumbai Indians படுதோல்வி ! CSK அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை வீரர் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதன் மூலம் 113 ரன்களில் சுருண்ட மும்பை 9வது தோல்வியை பதிவு செய்தது.

சிஎஸ்கே சரிவு

சிஎஸ்கே சரிவு

இந்த வெற்றியின் மூலம் 9வது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது புள்ளி பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் 8வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி, மீண்டும் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது 12 போட்டிகளில் 10 புள்ளிகளுடன், ரன்ரேட் மைனஸ் 0.05 என்ற விகிதத்தில் கொல்கத்தா அணி உள்ளது.

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

நேற்றைய ஆட்டத்தில் மட்டும் மும்பை வென்று இருந்தால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய் இருக்கும். சிஎஸ்கேவின் வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால் இந்த வெற்றியின் மூலம் டெல்லி, ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் பந்தயம் மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய ஆட்டங்கள்

முக்கிய ஆட்டங்கள்

இதில் பெங்களூரு, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் அணிகள் எஞ்சிய போட்டியில் குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால், அதிகபட்சமாக அந்த அணிகளால் 14 புள்ளிகளையே அதிகபட்சமாக வெல்ல முடியும். தற்போது மும்பை அணி காலை வாரியதால், வரும் 18ஆம் தேதி நடைபெறும் லக்னோ , கொல்கத்தா அணிக்கு இடையிலான முக்கிய போட்டியில் லக்னோ வென்றே தீர வேண்டும்.

சிஎஸ்கே Vs மும்பை

சிஎஸ்கே Vs மும்பை

அதே போன்று 17ஆம் தேதி நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி தோற்க வேண்டும். 19ஆம் தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு தோற்க வேண்டும். இதற்கு எல்லாம் முன்பு சிஎஸ்கே அணி எஞ்சிய போட்டிகிளில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் வியாழக்கிழமை சிஎஸ்கே, மும்பை அணியுடன் மோதுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022- KKR Win makes Play off chances tough for csk கேகேஆர் வெற்றியால் சிஎஸ்கேக்கு சிக்கல்.. சூடுபிடித்த ஐபிஎல் பிளே ஆப் பந்தயம்.. காலை வாரிய மும்பை
Story first published: Tuesday, May 10, 2022, 10:53 [IST]
Other articles published on May 10, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X