“அவரை வாங்க 10 டீமும் பணத்தை கொட்டும்”.. அடித்துக்கூறும் கே.எல்.ராகுல்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

மும்பை: ஐபிஎல் தொடரில் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை வாங்க 10 அணிகளும் போட்டிப்போடும் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2 புதிய அணிகளும், தாங்கள் ஒப்பந்தம் செய்த வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன.

இதனையடுத்து மெகா ஏலத்தின் மீது தான் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. சமீபத்தில் இதில் பங்கேற்கும் பட்டியல் வெளியிடப்பட்டன.

“அமீரகம் தராத 3 நல்ல விஷயங்கள்” ஐபிஎல் தொடருக்காக தென்னாப்பிரிக்கா தந்த ஆஃபர்.. சிந்திக்கும் பிசிசிஐ “அமீரகம் தராத 3 நல்ல விஷயங்கள்” ஐபிஎல் தொடருக்காக தென்னாப்பிரிக்கா தந்த ஆஃபர்.. சிந்திக்கும் பிசிசிஐ

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

2022ம் ஆண்டு மெகா ஏலத்திற்காக 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 12 - 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதற்காக பெங்களூரில் உள்ள தனி ஹோட்டலில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 ஜொலிக்கப் போகும் வீரர்

ஜொலிக்கப் போகும் வீரர்

இந்நிலையில் மெகா ஏலத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை வாங்க 10 அணிகளும் போட்டி போடவுள்ளதாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிஸ்கோ ரபாடா இந்த ஆண்டு அதிக மதிப்புமிக்க வீரராக திகழ்வார். கடந்தாண்டு வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள பெருமை அவரிடம் உள்ளது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

145 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசக் கூடியவர் ரபாடா. இதுமட்டுமல்லாமல், சரியான லெந்தில் கூடுதல் வேகத்தை பயன்படுத்தும் திறமையுள்ளவர். இவரைப் போல ஒருவரை அனைத்து அணிகளும் வைத்திருக்க விரும்பும். எனவே பெரும் அளவில் பணத்தை கொடுத்தாவது ரபாடாவை ஏலம் எடுக்க் அணிகள் முனைப்புக் காட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Rahul Dravid admits Team India 'could bat better in middle overs' | Oneindia Tamil
2 தென்னாப்பிரிக்க வீரர்கள்

2 தென்னாப்பிரிக்க வீரர்கள்

ரபாடாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்கோ ஜேன்சன் மற்றும் வாண்டர் டுசன் ஆகியோரும் சிறப்பாக ஜொலிப்பார்கள் என கே.எல்.ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KL Rahul think South africa's star pacer will be a valuable player in IPL 2022 mega auction
Story first published: Tuesday, January 25, 2022, 14:59 [IST]
Other articles published on Jan 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X