For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்ட்-ஐ மிஞ்சிய க்ருணால் பாண்ட்யா.. அம்பயரிடம் கடும் வாக்குவாதம்.. ஆர்சிபி ஆட்டத்தில் கவனிச்சீங்களா!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது க்ருணால் பாண்ட்யா அம்பயரிடம் கோபத்துடன் நடந்துக்கொண்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று லக்னோ அணி வெளியேறியது.

பல்வேறு திருப்பங்களுடனும், சுவாராஸ்யங்களுடனும் நடைபெற்ற இந்தப் போட்டியிலும் அம்பயர்களின் சர்ச்சை முடிவுகள் இருந்தது.

திடீரென களத்திற்குள் புகுந்த ரசிகர்.. ஜான்சீனாவாக மாறிய போலீஸ்.. கோலி அல்டிமேட் ரியாக்‌ஷன்- வீடியோ திடீரென களத்திற்குள் புகுந்த ரசிகர்.. ஜான்சீனாவாக மாறிய போலீஸ்.. கோலி அல்டிமேட் ரியாக்‌ஷன்- வீடியோ

அம்பயரிங் சர்ச்சை

அம்பயரிங் சர்ச்சை

நடப்பு தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் மற்றும் அம்பயர்களிடையே ஏதேனும் ஒரு காரணத்திற்காக மனக்கசப்புகள் இருந்துக்கொண்டே தான் இருந்துள்ளது. குறிப்பாக அம்பயரின் முடிவை எதிர்த்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், வீரர்களை வெளியேற சொன்னவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

க்ருணால் செய்த விஷயம்

க்ருணால் செய்த விஷயம்

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது க்ருணால் பாண்ட்யாவும் தனது பங்கிற்கான வாக்குவாதத்தை காட்டினார். லக்னோ அணி பந்துவீச்சின் போது, துஷ்மந்தா சமீரா வீசிய 12வது ஓவரில் முதல் பந்தே நோ பால் என அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேனின் இடுப்பிற்கு மேல் உயரமாக சென்றதாக கூறி ஸ்கொயர் லெக் அம்பயர் மைக்கேல் கௌக் நோ பால் அறிவித்தார். இதற்கு நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் அம்பயர் மதனகோபாலும் நோ பால் கொடுத்தார்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

நடுவர்களின் முடிவால் கடும் ஆத்திரமடைந்த க்ருணால் பாண்ட்யா நேராக அவர்களிடம் சென்று அது எப்படி நோ பால் எனக் கூறுகிறீர்கள், சரியாக பார்க்கிறீர்களா? இல்லையா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உள்ளே நுழைந்த கேப்டன் கே.எல்.ராகுல் சற்று சமாதானப்படுத்தினார். மேலும் இந்த நோ பால் விஷயத்தில் 3வது நடுவருக்கு பரிந்துரைக்க முடியாதா என கேட்டார். ஆனால் அது மறுக்கப்பட்டது. எனினும் ஃப்ரீ ஹிட்டில் சமீரா வீசிய வைட் யார்க்கரை மஹிபால் லோம்ரோவால் தொடக் கூட முடியவில்லை.

ஏமாற்றிய க்ருணால்

நேற்று லக்னோ அணியில் ஜேசன் ஹோல்டருக்கு மாற்றாக க்ருணால் பாண்ட்யா கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட்டை எடுத்து 39 ரன்களை வாரி வழங்கினார். பேட்டிங்கில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 26, 2022, 21:13 [IST]
Other articles published on May 26, 2022
English summary
IPL 2022: Krunal pandya heated Argument with Umpire in RCB vs LSG Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X