For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்று முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் பிளே ஆப் பந்தயத்தில் தொடர்ந்து நீடிக்கும். தோற்றால் வெளியேறிவிடும்

இதே போன்று லக்னோ அணி முதல் 2 இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக வென்று ஆக வேண்டும்.

ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்

3 மாற்றம்

3 மாற்றம்

இத்தகைய முக்கிய போட்டியில் கம்பீர், லக்னோ அணியில் 3 மாற்றங்களை செய்து அதிர்ச்சி தந்துள்ளார். பேபி ஏபிடி என்று அழைக்கப்பட்ட பதோனி, இலங்கை வேகம் சமிரா மற்றும் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு தரவில்லை. சமிராவுக்கு ஓய்வு வழங்கி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

குர்னல் நீக்கம்

குர்னல் நீக்கம்

ஆனால், குர்னல் பாண்டியா நீக்கப்பட்டதற்கு காரணம் புரியவில்லை. குர்னல் பாண்டியா எப்போதும் சக அணி வீரரிடம் சண்டை போடுவது, பயிற்சியாளர் கூறுவதை கேட்காமல் இருப்பது போன்ற செயலில் ஏற்கனவே சிக்கியவர். அவ்வளவு ஏன், லக்னோ அணியில் உள்ள தீபக் ஹூடாவும், குர்னல் பாண்டியாவுக்கும் ஏழாம் பொறுத்தம். ஆனால் இருவரும் மீண்டும் நண்பர்களாகிவிட்டதாக செய்திகள் வந்தன.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த நிலையில், முக்கிய ஆட்டத்தில் குர்னல் பாண்டியாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் தராதது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. ஆனால் அவருக்கு சிறு காயம் தான் ஏற்பட்டுள்ளதாக அணி சிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 3 வீரர்களுக்கு பதிலாக எவன் லிவிஸ், கிருஷ்ணப்பா கௌதம், மான் வொரா ஆகியோர் லக்னோ அணியில் விளையாடுகின்றனர்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

கொல்கத்தா அணியை பொறுத்தவரை ரஹானேக்கு பதில்,அபிஜித் தோமர் என்ற 27 வயது வீரருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர். வாழ்வா சாவா ஆட்டத்தில் உள்ள கொல்கத்தா இன்று வென்றால், ஐதராபாத் அணியின் பிளே ஆஃப் கனவு கருகிவிடும். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 18, 2022, 20:07 [IST]
Other articles published on May 18, 2022
English summary
IPL 2022- Lucknow axed Krunal Pandya in crucial match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X