For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ளே ஆஃப் செல்லும் 2வது அணி.. புள்ளிப்பட்டியலை மாற்றும் போட்டி.. லக்னோ vs ராஜஸ்தான் அதிரடி மாற்றம்!

மும்பை: ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் 2வது அணியை தீர்மானிக்கும் முக்கிய போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இரு துருவங்கள்.. சிஎஸ்கே போட்டியில் ஒரு சாதனை.. ஒரு வேதனை..? தோனிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!! இரு துருவங்கள்.. சிஎஸ்கே போட்டியில் ஒரு சாதனை.. ஒரு வேதனை..? தோனிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!

திருப்புமுணை போட்டி

திருப்புமுணை போட்டி

நடப்பு தொடரில் இரு அணிகளுமே பெரும் பலத்துடன் சாதித்து வருகின்றன. லக்னோ அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலும் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. ஆனால் இரண்டு அணிகளுமே இன்னும் ப்ளே ஆஃப் சுற்றை இறுதி செய்யவில்லை. இன்று அதற்கான போட்டி நடைபெறவுள்ளது.

லக்னோ அணி மாற்றம்

லக்னோ அணி மாற்றம்

லக்னோ அணியை பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், டாப் 2 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்துவிடும். ஆனால் கடந்த போட்டியில் தோற்றுவிட்டதால், இன்று கம்பேக் கொடுக்க வேண்டும். இதற்காக ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மாவுக்கு பதிலாக ரவி பிஷ்னாய் மீண்டும் வந்துள்ளார்.

ராஜஸ்தானுக்கு கட்டாயம்

ராஜஸ்தானுக்கு கட்டாயம்

இதே போல 14 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி இன்று தோற்றுவிட்டால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது கடினமாகிவிடும். ஏனென்றால் இதே 14 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி உள்ளது. மேலும் டெல்லி, பஞ்சாப் அணிகள் 12 புள்ளிகளுடன் இன்னும் 2 போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது. எனவே இதில் தவறவிட்டால் ரன் ரேட் முறை வந்துவிடும் அபாயம் உள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

லக்னோ : குயிண்டன் டிக்காக், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, ஆயூஸ் பதோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், மோஷின் கான், ரவி பிஷ்னாய், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான்

ராஜஸ்தான்: யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், ஜேம்ஸ் நீஷம், ரியான் பராக், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்

Story first published: Sunday, May 15, 2022, 19:26 [IST]
Other articles published on May 15, 2022
English summary
IPL 2022: Lucknow super giants clash with Rajsthan royals, Match to decide 2nd team for the playoffs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X