For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். – சி.எஸ்.கே. பெயருக்கு சவால் விடும் லக்னோ அணி.. சி.எஸ்.கே. காப்பியா LUCKNOW SUPER GIANTS

லக்னோ: ஐ.பி.எல். 15வது சீசனில் களமிறங்கும் புதிய அணியான லக்னோ தங்களது பெயரை அறிவித்துள்ளது.

Recommended Video

IPL 2022: Lucknow franchise named Lucknow Super Giants

என்ன பெயர் வைக்கலாம் என்று ரசிகர்களுக்கு அந்த அணி போட்டி ஒன்றை வைத்தது. இதில் பல ரசிகர்கள் லக்னோ நவாப்ஸ் என்ற பெயரை தேர்வு செய்ததாக தகவல் வெளியானது

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

ஆனால், லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சவால் விடும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது.

பழைய அணியின் பெயர்

பழைய அணியின் பெயர்

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சஞ்சிவ் கோயங்கா, ரசிகர்கள் தான் இந்த பெயரை சூட்டினார்கள் என்றும், அணிக்கு வழக்கம் போல் ஆதரவு அளித்து ஆசிர்வதியுங்கள் என்று கூறினார். ஏற்கனவே கோயங்காவின் புனே அணியை வாங்கிய போது அந்த அணிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் என்ற பெயரை சூட்டியிருந்தார்

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

தற்போது அதே பெயரை லக்னோ அணிக்கும் வைத்துள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளஃவரும், மெண்டராக கவுதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு 17 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது

சி.எஸ்.கே. காப்பி

சி.எஸ்.கே. காப்பி

இதே போன்று ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஸ்டோனிஸ் மற்றும் இந்தியவீரர் ரவி பிஸ்னாயை ஏலத்திற்கு முன்பே லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளது. லக்னோ அணியை 7090 கோடி ரூபாய் கொடுத்து கோயங்கா வாங்கியுள்ளார். கோயங்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனி என்றாலே பிடிக்காது. இதனால் சி.எஸ்.கே.வை குறிவைக்கும் விதமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

ராகுல் வேண்டாம்

ராகுல் வேண்டாம்

கே.எல்.ராகுல் சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், தொடக்க வீரர் என மூன்றும் கலந்த கலவையாக இருப்பதால் அணிக்கு அவர் நல்ல தேர்வு என்று கம்பீர் கூறியிருந்தார், ஆனால் கே.எல்.ராகுலின் கேப்டன்சி திறமை மோசமாக இருப்பதாகவும், அவர் கேப்டனுக்கு தகுதியான நபர் கிடையாது என்றும் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Monday, January 24, 2022, 21:12 [IST]
Other articles published on Jan 24, 2022
English summary
IPL 2022 Lucknow Team unveils their name as Lucknow super Giants ஐ.பி.எல். – சி.எஸ்.கே. பெயருக்கு சவால் விடும் லக்னோ அணி.. சி.எஸ்.கே. காப்பியா LUCKNOW SUPER GIANTS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X