For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த வீரரை வாங்க கடமைப்பட்டுள்ளோம்”.. ரெய்னாவை விட முக்கியமானவரா?.. காசி விஸ்வநாதன் ஓபன் டாக்!

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சிஎஸ்கேவின் ப்ளான் என்னவாக இருக்கும் என அணியின் செயல் தலைவர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் கழட்டிவிடப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் தேர்வாக ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்தது. அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். அணியின் ஓப்பனிங் வீரர் டூப்ளசிஸ் தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக்கொண்டது,.

முக்கிய வீரரே இல்லை

முக்கிய வீரரே இல்லை

தென்னாப்பிரிக்க வீரரான டூப்ளசிஸ் கடந்த சீசனில் சென்னை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்களை விளாசினார். அவரின் சராசரி 45.21 என அட்டகாசமாக இருந்தது. இவரின் ஆட்டங்கள் தான் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தது. ஆனால் இப்படிபட்ட முக்கிய வீரரை விடுத்து மொயீன் அலியிடம் பார்வையை திருப்பியது சிஎஸ்கே.

சிஎஸ்கேவின் தகவல்

சிஎஸ்கேவின் தகவல்

இந்நிலையில் மெகா ஏலத்தின் போது டூப்ளசிஸ் நிச்சயம் வாங்கப்படுவார் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சென்னை அணியை 2 முறை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் டூப்ளசிஸ். அவரை ஏலத்தின் முதன்மை வீரராக வாங்க வேண்டியது எங்கள் கடமை. அதற்காக முயற்சிப்போம். ஆனால் அவை நிறைவேறுமா என்பது நமது கைகளில் இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும், சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்போம் எனக்கூறியுள்ளார்.

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil
ஏலத்திற்கான திட்டம்

ஏலத்திற்கான திட்டம்

சென்னை அணியை பொறுத்தவரை மீண்டும் பழைய வீரர்களையே மீண்டும் கொண்டு வர திட்டங்கள் தீட்டி வருகிறது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை தான் முதல் வீரராக குறி வைக்கும் என தகவல் வெளியானது. அவருக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸ், சாம் கரண் என சிஎஸ்கே அணியின் திட்டங்கள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 3, 2021, 19:40 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
CSK CEO Kasi viswanathan gives a hints about bitting Faf du Plessis in the IPL 2022 mega auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X